SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூர் அருகே காவல்துறை மீது கல்வீச்சு: மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை தடுத்ததால் பொதுமக்கள் ஆத்திரம்

2019-02-20@ 17:51:57

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஓசூரை அடுத்த மதகொண்டப்பள்ளி பஸ்கர வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு அப்பகுதியில் இன்று எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வண்ண தோரணங்கள், பலூன்கள், அலங்கார தட்டிகள் கட்டப்பட்ட காளைகள் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இந்த நிலையில், எருது விடும் நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், எருது விடும் விழாவை நிறுத்திவிட்டு கலைந்து செல்ல வலியுறுத்தியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீசார் மீது கற்களை வீசினர். மேலும் காவல்துறை வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தால் காவல்துறை அதிகாரிகள் சிலர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து தடியடி நடத்தி காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சுமார் 50 பேரின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்