SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக தேர்தல் கூட்டணி கொள்கை ரீதியில் அமைக்கப்படவில்லை: தம்பிதுரை

2019-02-20@ 14:49:15

சென்னை: மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும், கூட்டணி ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும். மக்களவைத் தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் பாமக இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. தேர்தல் கூட்டணி என்பது கொள்கை ரீதியில் அமைக்கப்படுவதல்ல. எதிரியை வீழ்த்த வேண்டும், மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் அமைக்கப்படுகிறது.

இதனால் கூட்டணி வைத்துள்ள கட்சியின் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல. அவர்களின் கொள்கை வேறு, எங்களின் கொள்கை வேறு. இரு கட்சிகளும் ஒன்றையொன்று அந்தந்த காலகட்ட செயல்பாடுகளுக்கேற்ப விமர்சித்துள்ளன. ஜெயலலிதா இருந்தபோதே பாமகவுடன் 1998, 2009 மக்களவைத் தேர்தல், 2001 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் கூட்டணி வைத்துள்ளோம். அதிமுக வலிமையான கட்சி. அடுத்து மத்தியில் அமையும் ஆட்சியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்