SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2019-02-20@ 00:12:54

*  நியூசிலாந்து - வங்கதேசம் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனெடின் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30க்கு தொடங்கியது.
* 'ஸ்மித், வார்னர் இருவரும் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. ஆசிரியர், வழிகாட்டி இல்லாத மாணவர்களைப் போல நாங்கள் அவதிக்குள்ளானோம்’ என்று வேகப் பந்துவீச்சாளர்  ஹேசல்வுட் கூறியுள்ளார்.
* 2019-20 சீசனில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக ஹாமில்டன் மசகட்சா செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 டி20, 5 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி, டேராடூன் ராஜிவ் காந்தி சர்வதேச  ஸ்டேடியத்தில் நடத்தப்படும். முதல் டி20 நாளை நடக்கிறது.

* ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய சச்சினின் சாதனையை (49 சதம்) இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (39 சதம்) முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று பயிற்சியாளர் முனிஷ் பாலி தெரிவித்துள்ளார்.
* ஹர்திக் பாண்டியாவை விட தற்போது ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிறந்த ஆல் ரவுண்டராகத் திகழ்கிறார் என்று ஆஸி. முன்னாள் நட்சத்திரம் மேத்யூ ஹேடன் பாராட்டி உள்ளார்.
* துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர், சிமோனா ஹாலெப், கார்பினி முகுருசா, எலினா ஸ்விடோலினா, பெத்ரா குவித்தோவா ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு  முன்னேறி உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

 • holifestivel

  வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்