SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் ஆதார் சேவை மையங்கள் 3 நாட்கள் இயங்காது

2019-02-19@ 21:15:49

வேலூர்: இந்தியாவில் ஆதார் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் நிரந்தர  சேவை மையங்கள் இயங்கி வருகிறது. இங்கு புதிய ஆதார் அட்டை வழங்கும் பணிகளும், ஆதார் அட்டையில் பிழை திருத்தும் பணிகளும் நடக்கிறது. முதன்முறையாக ஆதார் பதிவு செய்யும்போது கட்டணம் ஏதும் வசூலிக்ககப்படுவது இல்லை. ஆனால் பெயர் திருத்தம் உள்ளிட்டவைக்கு அரசு நிர்ணயித்துள்ள ₹50 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் உள்ள தனிநபர்களின் புதிய ஆதார் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்யும் பணி மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக நேற்று முதல் 3 நாட்கள் வரை ஆதார் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆதார் மையங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஐடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சர்வர் பழுதாகும் போதெல்லாம் ஆதார் பணிகளில் இடர்பாடு ஏற்படுகிறது. எனவே அந்த ஐடியில் புதிய சாப்ட்வேர் இணைத்து புதிய தொழில்நுட்பத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழகம் முழுவதும் புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதனால் 3 நாட்களுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கவோ திருத்தம் செய்யவோ முடியாது. எனவே பொதுமக்கள் யாரும் ஆதாருக்காக வர வேண்டாம். இந்த புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்திய பிறகே அதன் செயல்பாடுகள் என்ன என்பது தெரிய வரும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்