SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நொறுங்கி கிடக்கும் சாலையை கண்டுகொள்ளவில்லை சூப்பர் சாலையை சிதைத்து புது சாலையாம்!: கடையம் அருகே கிராம மக்கள் குமுறல்

2019-02-19@ 21:00:02

கடையம்: கடையம் அருகே பஸ்சே செல்லாத நல்லாயிருந்த சாலையை தோண்டி ரூ.75 லட்சம் செலவில் புதிய சாலை போடுவதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.நெல்லை மாவட்டம் கடையம் அடுத்து ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி உள்ளது. இங்குள்ள செட்டிகுளம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சென்று வர மூன்று சாலைகள் உள்ளன. இதில் கல்யாணிபுரம் மதுக்கடைக்கு எதிர்புறம் உள்ள சாலையும் ஒன்று. இந்த வழி மெயின் ரோட்டிலிருந்து சுமார் 1 கீமிட்டர் தூரத்தில் கிராமம் உள்ளது.இந்த சாலை அமைத்த நாள் முதல் இதுவரை அந்த வழியில் கார், அரசு பஸ், என வாகனங்கள் செல்லவில்லை. ஏனென்றால் மற்ற இரண்டு வழியை தான் பிரதானமாக கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிகள், மிதிவண்டி ஓட்டிகள் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாதையில் புதிய தார் சாலை அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் தார் சாலை தோண்டப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பழைய தார் சாலை பெயரளவில் மட்டுமே பழைய சாலை. இந்த பாதையில் அதிகளவில் போக்குவரத்து இல்லாததால் சாலையில் ஒரு இடத்தில்கூட குண்டும் குழி கிடையாது. ஜல்லி கற்கள் பெயர்ந்ததும் கிடையாது. நல்ல தரமான சாலையாகவே காணப்பட்டது.  இதில் தற்போது ரூ.75 லட்சம் செலவில் சுமார் 1 அரை  கீமிட்டர் தூரத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுபற்றி அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், ``எங்கள் கிராமத்திற்கு மூன்று வழிகளில் வந்தடையலாம். இதில் மதுக்கடைக்கு எதிராக உள்ள சாலை காட்டு பகுதி என்பதாலும், மதுப்பிரியர்கள் தொல்லையாலும், ஊரிலிருந்து தொலைவில் இருப்பதாலும் இந்த சாலையை நாங்கள் அதிகம் பயன்படுத்துவது இல்லை. பயன்படுத்தாத சாலைக்கு அதுவும் நல்லா இருக்கிற சாலையை தோண்டி புது சாலை போடுவது முட்டாள்தனமான செயலாகும் என்றனர்.செட்டிகுளம் விலக்கு பகுதியிலிருந்து ஊருக்கு வரும் மற்றொரு சாலை குண்டும் குழியுமாக  மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்தால் மக்களுக்கு பயனாக இருக்கும். அதை விட்டுவிட்டு நல்லா இருந்த சாலையை போடுவதன் மூலம் அரசு ரூ.75 லட்சம் வீணாகிறது என மக்கள் வேதனை தெரிவித்தனர். அதிகாரி மழுப்பல்
இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது நல்லா இருந்த ரோட்டை கிளறி அதில் புதிதாக சாலை அமைப்பது என்பது வேதனையாகதான் உள்ளது. அரசும் 100 மீட்டர் இருந்தால் வேண்டாம். தொடர்ச்சியாக 1 கி மீட்டர் திட்டத்தில் சாலை போடவேண்டும் என கூறும்போது அந்த பகுதியில் அந்த சாலை தான் உள்ளது என்றார்.  

நலத்திட்டங்கள் செய்யலாம்
கடையம், ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பல கிராமங்களில் தார் சாலை காணாமால் போகி மண் சாலையாக மாறியுள்ளது. இந்த சாலைகளை செப்பனிட்டால் கூட பயனுள்ளதாக இருக்கும். இல்லை என்றால் ரூ.75 லட்சத்திற்கு  எத்தனையோ நலத்திட்டங்கள் மக்களுக்கு செய்யலாம். ஆனால் அதனை தவிர்த்து சூப்பரா இருக்கும் சாலையை உடைத்து புதுச்சாலை அமைப்பது என்பது அதிகாரிகளின் உச்சக்கட்ட ஊழலே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்