SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை மாநகரில், கடந்த 2½ மாதத்தில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 27 ஆயிரத்து 772 பேர் மீது வழக்கு: ரூ. 27 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் வசூல்

2019-02-19@ 20:32:26


கோவை: கோவை மாநகரில் கடந்த 2½ மாதங்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 27 ஆயிரத்து 772 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 27 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.விபத்தில் மரணமடைவோரின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக ‘ஹெல்மெட்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கோவை போக்குவரத்து போலீசார் தீவிரமாக்கி வருகிறார்கள். மாநகர பகுதியின் முக்கியமான இடங்களில் வாகன தணிக்கை செய்து ‘ஹெல்மெட்’அணியாமல் சாலை விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன்படி கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி 15-ந் தேதி வரை ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 27 ஆயிரத்து 772 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீஸ் மேற்கு சரக இன்ஸ்பெக்டர் உதயகுமார் கூறும்போது:-கோவை மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2017-ம் ஆண்டை விட 2018-ல் ‘ஹெல்மெட்’ அணிவது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

நகரங்களில் பெரும்பாலானோர் ‘ஹெல்மெட்’ அணிவதை கடை பிடிக்கின்றனர். புறநகர் பகுதிகளில் இருந்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இதனை முறையாக கடைபிடிப்பது இல்லை. கடந்த டிசம்பர் மாதம் 10 ஆயிரத்து 372 பேர் மீதும், ஜனவரி மாதம் 10 ஆயிரத்து 970 பேர் மீதும், பிப்ரவரி 15-ந் தேதி வரை 6 ஆயிரத்து 430 பேர் மீதும் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 27 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் பெறப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்னல்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் சாலை விதிமீறலை மீறும் வாகன பதிவு எண்களை இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் தன்மை கொண்டது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிமுறையை முறையாக கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்