SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி முக்கொம்பில் ரூ.387.60 கோடியில் புதிய கதவணை அமைக்க முதல்வர் அடிக்கல்

2019-02-19@ 19:30:29

சென்னை: திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் ரூ.387.60 கோடியில் புதிய கதவணை கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

புதிய கதவணை அமைக்கும் பணி 24 மாத காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முக்கொம்பு மேலணையில் உள்ள 48 மதகுகளில் 9 மதகுகள் திடீரென இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து கொள்ளிடம் வழியாக தண்ணீர் அதிக அளவு வெளியேறியது. இதை தொடர்ந்து அந்த அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க தற்காலிக ஏற்பாடுகளை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து ரூ.96 லட்சம் செலவில் நீர் வெளியேற்றத்தை தடுக்க தற்காலிக ஏற்பாடும் செய்யப்பட்டது.  இந்த நிலையில் கொள்ளிடத்தில் புதிய கதவணை ரூ.435 கோடி செலவில் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.

தற்போது முக்கொம்பு மேலணையில் ரூ.387.60 கோடியில் புதிய கதவணை கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் முக்கொம்பு கொள்ளிடம் கதவணையை ரூ.38.85 கோடியில் பலப்படுத்தும் பணிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்