SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடந்தையில் மாசி மகம் விழா கோலாகலம் மகாமக குளத்தில் 12 சுவாமிகள் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

2019-02-19@ 19:17:08

கும்பகோணம்: மாசிமகத்தையொட்டி மகாமக குளத்தில் இன்று 12 சிவன் கோயில் சுவாமிகள் தீர்த்தவாரி நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடினர். சக்கரபாணி கோயில் தேரோட்டம்  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.மாசி மகத்திருவிழாக்கள் சிவன் மற்றும்  பெருமாள் கோயில்களில்  வெகு சிறப்பாக  ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கும்பகோணத்தில் மகாமக தொடர்புடைய சிவன் கோயில்களான ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6  சிவன்கோயில்களில் மாசிமக பெருவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோன்று வைணவத் தலங்களான சக்கரபாணிசுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் ஆகிய கோயில்களில் மாசிமக விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்றிரவு விநாயகர், முருகர், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மின்னொளி அலங்காரத்தில் வெள்ளி ரத வீதியுலா நடந்தது.   காசி விசுவநாதசுவாமி கோயில், அபிமுகேஸ்வரசுவாமி கோயில், கவுதமேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று சிவன் கோயில்களின் தேரோட்டம்  மகாமக குளக்கரையில் நேற்று மாலை நடைபெற்றது.  அதேபோல் வியாழசோமேஸ்வரர் கோயில் தேரோட்டம் அந்த கோயிலை சுற்றியும் நடந்தது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாசி மகத்தையொட்டி காலை 7 மணிக்கு சக்கரபாணிசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். தொடர்ந்து ஆதிவராக பெருமாள் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்த்தவாரி நடந்தது.

பகல் 12 மணி அளவில், பத்து நாள் உற்சவம் நடைபெறும் 6  சிவன் கோயிலின் சுவாமிகள்,  அம்பாளும், ஒரு நாள் உற்சவம் நடைபெறும் சிவன்கோயில்களான கொட்டையூர்  கோடீஸ்வரசுவாமி கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர்,  ஏகாம்பரேஸ்வரர்,  நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 12  சிவன்கோயில்களில் இருந்தும், சுவாமி, அம்பாள் மகாமக குளக்கரையில் பகல் 12  மணிக்கு வந்து, அந்தந்த கோயில் அஸ்திரதேவருக்கு 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று  தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது பக்தர்களும் புனித நீராடினர். பின்னர் சாரங்பாணி சுவாமி தெப்ப உற்சவம் நடந்தது. இரண்டுமுறை தெப்பத்தை சுற்றி சுவாமி வலம் வந்தது.  பின்னர்  சக்கரபாணிசுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயிலில் காவிரியில் திருமஞ்சனம் நடந்தது. மாசிமகத்தையொட்டி தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர்  உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு கும்பகோணத்தில் குவிந்தனர்.  அதிகாலையே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதுவரை தர்ப்பணம் கொடுக்க முடியாமல் போனவர்கள்  இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்ததற்கு ஈடாகும் என்பதால் தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் செய்திருந்தனர். மாசி மக விழாவை முன்னிட்டு ஏஎஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குளத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் ரோந்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கும்பகோணத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.இதேபோல் திருவையாறு காவிரி புஷ்பமண்டபம் படித்துறையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்