SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி : பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு என அறிவிப்பு!

2019-02-19@ 17:21:06

சென்னை : அதிமுக-பாஜக இடையிலான மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் உள்ள
தனியார் நட்சத்திர ஹோட்டலில் 2ம் கட்டமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக பிப்., 14ம் தேதி ஏற்கனவே கூட்டணி குறித்து அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய சென்னை வந்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, முதளிதரராவ் உள்ளிட்டோர் பாஜக சார்பில் பங்கேற்றனர்.

உடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக மூத்த அமைச்சர்கள் இருந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு வங்கி எதுவும் இல்லை என்பதால் 5 தொகுதிகள் மட்டும் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் இருகட்சியினரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-பாஜக மெகா கூட்டணி அமைத்து தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு, பாஜக முழு ஆதரவு அளிக்க தீர்மானம் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார். பின்னர் பேசிய பியூஸ் கோயல், அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். அதிமுக தலைமையில் கூட்டணியாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்றும், தமிழகத்தில் தங்கள் கூட்டணி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் செயல்படுவர் என்றும் அவர் கூறினார்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என கூறிய அவர், தமிழகம், புதுச்சேரியில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார். மேலும் மோடியை மீண்டும் பிரதமராக்க அதிமுகவுடன் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பின்னர் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவார் என்று கூறிய பியூஸ் கோயல், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற உழைப்போம் என்று உறுதியளித்துள்ளார். முன்னதாக இன்று காலை அதிமுகவுடன், பாமக கூட்டணி உறுதியானதாக அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்