SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பென்னாகரம் அருகே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு.. 70 ஆண்டாக அடிப்படை வசதி இல்லை என புகார்

2019-02-19@ 16:59:48

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 70 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாததால் கிராமமக்கள் பல கிலோ மீட்டர் நடந்து சென்று குடிநீர் எடுத்துவரும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஒக்கேனக்கல் வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணப்பட்டி மலை கிராமம் பென்னாகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் காடு மற்றும் மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளுக்கும் இல்லாமல் 70 ஆண்டுகளாக தவித்து வருவதாக கிராமமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருவதால் பண்ணப்பட்டி மலை கிராமமக்கள் கொளுத்தும் வெயிலில் பல கிலோ மீட்டர் நடந்து சென்று ஊற்று தண்ணீரை எடுத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சுமார் 70 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவித்து வரும் தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை சரி செய்ய அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்