SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக-பாமக கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி : மு.க.ஸ்டாலின்

2019-02-19@ 15:29:36

சென்னை : பாமக-அதிமுக கூட்டணி 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன், பாமக கூட்டணி வைத்துள்ளது. இதுகுறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மொத்தம் 7 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை மிக மோசமாக வார்த்தைகளால் விமர்சனம் செய்துவிட்டு தற்போது அதே கட்சியுடன் பாமக கூட்டணி வைத்து இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார். 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீ்ட் மட்டுமின்றி வேறு ஏதோ கூட பின்னணியில் உள்ளது என்றும், ராமதாசுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை, பணத்தை பற்றி தான் கவலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டவர் ராமதாஸ் என்று ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அதிமுகவின் கதை என்ற அந்த புத்தகத்தில், ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் தொடர்பான ஊழல்கள் விளக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதிமுக-பாமக கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என்றும், 2009 தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி மிக மோசமாக தோல்வி அடைந்தது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் இந்த கூட்டணி தேர்தலில் மிக மோசமாக தோல்வியை சந்திக்கும் என்று அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்