SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு

2019-02-19@ 14:54:00

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய அரபிக்கடல் முதல் கர்நாடக கடற்பகுதி வரை வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேயில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும், ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்