SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கில் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

2019-02-19@ 14:47:33

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கில் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பெண் எஸ்.பி அளித்த புகார் மனு மீதான விசாரணையில் ஐ.ஜி முருகன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தொடர்பாக, நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-ஆக உள்ள முருகன் மீது, அதே பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி.சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

புகாரை விசாரித்த விசாகா குழு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி முருகன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், லஞ்ச ஒழிப்பு துறையிலேயே விசாரணை குழு உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதேபோல முருகனை பணியிடமாற்றம் செய்யக்கோரி புகார் தெரிவித்த பெண் எஸ்.பியும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி எஸ்.எம்.சுரமணியம் கடந்த வாரம் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், தற்போது விசாரணை நடத்தி வரும் விசாகா கமிட்டி, 2 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும், அதேபோன்று சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார்.

அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலக அறைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் எனவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐஜி.முருகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், சிபிசிஐடி மற்றும் விசாகா கமிட்டியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்