SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவிப்பு

2019-02-19@ 11:22:43

போபால்: மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலும் மத்தியப்பிரதேசத்தில் விளையும் தக்காளிக்கு பாகிஸ்தானில் வரவேற்பு இருந்தது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

காஷ்மீரில் புல்வாமாவில் மத்தியப்படை வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் பெத்லவாட் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டனர். பாகிஸ்தானில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்ட தக்காளியை அவர்கள் குறைந்த விலையில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்