SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும்: உச்ச நீதிமன்றம்

2019-02-19@ 08:32:05

டெல்லி: கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும்' என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லுாரியில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்த சென்றனர். அப்போது கல்லுாரிக்குள் அவர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அக்கல்லுாரி மீது இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வி என்பது சிலருக்கு பணம் சம்பாதிக்கும் தொழிலாக இருக்கலாம். ஆனால் அதன் தரத்தை மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்