SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ரெஸ்பான்ஸ் இருக்குமானு உளவுத்துறை விசாரிப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2019-02-19@ 00:34:54

‘‘வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதை தெரியுமா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘நேரடியா கேட்க வேண்டியதுதானே... சொல்றேன்... தன்னை இலை கட்சியின் விவிஐபிக்கள் மற்றும் அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் முழுமையாக ஒதுக்கி
விட்டதாகவே தம்பியானவர் பீல் பண்றாராம்... முதல்வராக இருக்க வேண்டிய நான் இன்னும் தமிழகத்துக்கும் டெல்லிக்கும் எத்தனை நாள் காவடி தூக்குவது... இனி தமிழக அரசியல்தான் எனக்கு சரிபடும்னு சொல்லி  இருக்கிறாராம்... அதனாலதான் தனக்கு நாடாளுமன்றத்தில் பதவி ெகாடுத்தது எதிர்க்கட்சி என்ற நிலையில்தான்... கூட்டணி கட்சி என்ற நிலையில் கொடுக்கவில்லை என்று சொல்லி பூ கட்சியின் தலைமைக்கு பீபீ  ஏத்திட்டாராம்... ஜெயலலிதா இணக்கமாக இருந்ததால இந்த பதவி கிடைத்து என்பதை வசதியாக மறந்துவிட்டு எதிர்க்கட்சியாக இருந்ததால்தான் கிடைத்தது என்று எப்டி சொல்லலாம் என்று அதிமுக அடிமட்ட தொண்டர்கள்  கொந்தளிப்புடன் கேட்கின்றனர்... ஆனால், முதலாளியம்மா சிறையில் இருப்பதால் எல்லாம் முடங்கி இருப்பதால் தம்பி கடிகாரத்தில் உள்ள பெண்டுலம் மாதிரி இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆடிட்டு இருக்காராம்...’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘கோயம்பேடு கட்சி ஆரம்பத்துல படுதோல்வி, டெபாசிட் பறிபோனதற்கு என்ன காரணம் தெரியுமா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அந்த கட்சியின் தலைவர் வேண்டுமென்றால் ஸ்டாராக இருக்கலாம்... ஆனால் ஒரு கட்சியின் ஆணிவேர் என்று அழைக்கப்படுபவர்கள் வாக்குச்சாவடி பூத் ஏஜென்ட் தான். பல தேர்தல்களில் 11 மணிக்குமேல் பூத் ஏஜென்ட்டுகள்  யாரும் வாக்குச்சாவடியில் இருக்க மாட்டார்கள்... பல வாக்குசாவடிகளுக்கு பூத் ஏஜென்ட்டே கிடைக்கவில்லை... இதனால் அக்கட்சியின் அடித்தளம் ஆடியதால் பல இடங்களில் டெபாசிட் வாங்க முடியல... இந்த நிலையில  அடித்தளமே இல்லாத மக்கள் பெயரில் கட்சியை தொடங்கி உள்ளவர், பூத் ஏஜென்ட் இல்லாமல் திண்டாடிட்டு வர்றாராம்... 39 தொகுதிகளும் மலைகிராமங்கள், பஸ்சே பார்க்க முடியாத கிராமங்கள், நகரங்கள் என பல்வேறு  மூலை முடுக்கில் இருக்கிறதாம்... அதனால பூத் ஏஜென்ட் கிடைப்பாங்களான்னு தவிப்பதாக அவங்க கட்சி தொண்டர்களே புலம்பறாங்க... தலைவரே தோற்றாலும் அது ெவற்றிகரமான தோல்வியா இருக்கணும்னு  கேட்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ இரண்டாயிரம் ரூபாய் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்காம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘திமுக நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்காம். இதனால அதிர்ந்துபோன இலைகட்சி அப்செட்ல இருக்காங்க... இதனால உடனடியாக எல்லா ஊராட்சிகளிலும் தெருமுனை கூட்டம்  நடத்தணும்னு, இலை கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டிருக்காம். ஆனா, இந்த கூட்டத்தில் மக்களே வருவதில்லையாம்.. சில கட்சிக்காரர்கள் மட்டுமே வர்றாங்களாம். மாங்கனி மாவட்டத்துல ஒரு ஓட்டு கூட  சிதறக்கூடாது என்று ஐடியா செய்துள்ளனர். அதாவது ஆத்தூரில் உள்ள ஒரு வில்லேஜில் நடந்த தெருமுனை கூட்டத்தில் வழக்கத்தை விட, கூட்டம் அதிகமாக இருந்ததாம். இது குறித்து உளவுத்துறை விசாரித்ததில் ‘இப்ப 2  ஆயிரம் வழங்க கணக்கு எடுத்துக்கிட்டு இருக்காங்கல்ல, இந்த கூட்டத்துக்கு வந்தாதான், அதுக்கு பெயர் பதிவு செய்ய முடியும் என்று எங்க ஏரியா, இலை கட்சிகாரங்க சொல்லிட்டாங்க. 2 ஆயிரம் கிடைக்கும் என்பதால நான்  இந்த கூட்டத்துக்கு வந்து பெயரை பதிவு செய்துள்ளேன்னு வெள்ளந்தியாக சொன்னாங்களாம். இது இப்படியிருக்க, 2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு மக்களிடம் எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்று உளவுத்துறை கணக்கெடுத்து  வருவது தனிக்கதை. அதுல பல சாதக, பாதகமான விஷயங்கள் கிடைச்சு இருக்காம்... அதை சற்று மாற்றி நிறைய சாதகங்கள் இருப்பதாக உளவுத்துறை மேலிடத்தை குளிரவைக்க அறிக்கையாக மாற்றி அனுப்பி இருக்காம்...’’  என்றார் விக்கியானந்தா.

‘‘விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனுக்கள் மலைபோல் குவிகிறதாம், கலெக்டர் ஆபிஸ் காற்று வாங்குதாமே...’’ என்று சந்தேகத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடைபெறும். கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை  பெறுவர். 500க்கும் மேற்பட்டவர்கள் வந்து மனு அளிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமோ இல்லையோ அந்த துறையிலிருந்து ஒருவாரம் கழித்து பதில்மனு மட்டும்  தபால் மூலம் வந்துசேரும். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்குமாம்... இதே நாளில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பொதுமக்களுக்கான குறைகேட்புக்கூட்டம் நடைபெறும்...  இங்கு காவல்துறை சம்மந்தமான கோரிக்கைகள், பிரச்னைகள், வழக்கு தொடர்பான மனுக்கள், மோசடி, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் போன்ற புகார்கள் கொடுக்க மட்டும் வருகிறார்கள். எஸ்பி ஜெயக்குமார்  பொறுப்பேற்றதில் இருந்தே பேருந்து இல்லை,

 குடிநீர் பிரச்னை மறியல் செய்யப்போகிறோம், சாலை சரியில்லை என்ற புகார்கள் எழுந்தவுடன் உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பேசி தீர்வு காண்பதில் எஸ்பியின்  செயல்பாடு மக்களை கவர்ந்துவிட்டதாம்... கடந்தவாரம் சென்னை செல்வதற்கு பேருந்து இல்லாமல் பயணிகள் தவித்தபோது உடனடியாக துறை அதிகாரியிடம் பேசி சிறப்பு பேருந்துகளை இயக்க வைத்தார். அதே போல்  வாட்ஸ்அப்பில் வரும் குடிநீர் பிரச்னை, நகரத்தில் சாலையில் பள்ளாங்குழி போன்ற புகார்களை பார்த்துவிட்டு உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மட்டுமின்றி உள்ளூர் காவல்நிலைய போலீசாரையும் அனுப்பி அந்த பணிகள் முடிக்கப்படுகிறது. இதனால் எஸ்பி அலுவலகத்துக்கு மனுஅளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று நடந்த குறைகேட்புக்கூட்டத்தில் கலெக்டர் அலுவலகம் காற்று வாங்கியபோது, எஸ்பி அலுவலகம் களைகட்டியது. பிற்பகல் 2.30 மணிவரை மனு அளிக்க வருவோரின்  எண்ணிக்கை அதிகரித்தது...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்