SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலைக்கும் பூவுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை ஜவ்வுமாதிரி இழுப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-02-18@ 00:10:43

‘‘புயல் வேகத்தில் போன பேச்சுவார்த்தை சிக்கல் காரணமாக தேங்கி நிற்பதால் மற்ற கட்சிகளுடன் இலை கட்சி ெதாகுதி பங்கீடு குறித்து உறுதி செய்ய முடியாமல் திணறி வருதாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூ கட்சி கேட்கும் தொகுதிகள் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்... அதேசமயம் கூட்டணிக்காக இன்னொரு கட்சியும் தங்களுக்கு இந்த தொகுதி தான் வேண்டும் என்று பட்டியல் கொடுத்துள்ளதாம். அதிலும் பூ கட்சி கேட்ட தொகுதிகள் அடங்கி இருக்காம்... இதனால இலை கட்சி பூ கட்சி தூதுவரிடம் அந்த கட்சி நம்ம கூட்டணியில இருந்தா நமக்கு பலம்... அவங்க கேட்ட அத்தனை தொகுதியும் கொடுக்கப்போவதில்லை. அதில் ஒரு தொகுதியை நீங்கள் விட்டு தரணும்... அதேபோல எங்களுக்கு அதிகமான வெற்றி வாய்ப்பு மற்றும் எங்கள் தலைவர்களின் வாரிசுகள் தேர்தலில் நிற்பதால் அவர்கள் கேட்கும் தொகுதியை கொடுத்தால்தான் தேர்தலில் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு வேலை ெசய்வார்கள்... அவர்களை பகைத்து கொண்டு எளிதாக வெற்றி பெறும் தொகுதியை உங்களுக்கு தருவதில் சிக்கல் இருக்குன்னு இலை கட்சி தரப்பு சொன்னாங்களாம்... குறிப்பாக கொங்கு பெல்ட்டில் குறிப்பிட்ட 2 தொகுதிகளை கேட்டாங்களாம்... ஆனால் இரண்டு அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு இருக்காங்களாம்... நாங்க தொகுதியை தயார் செய்து வைத்திருக்கிறோம்... அந்த தொகுதியில் ஏராளமான மக்கள் பணியை செய்துள்ளோம்... அது எங்கள் கோட்டை...வேறு மண்டலத்தில் கேளுங்கள் என்று சொல்லிட்டாங்களாம்.... இதனால தான் பேச்சுவார்த்தை இழுத்து கொண்டே போகுதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்புறம்...’’
‘‘பூ கட்சியின் முக்கிய தலைவர்கள் கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்த இடத்திலேயே மீண்டும் இலை கட்சி பலத்தோடு போட்டியிட்டால் வெற்றி பெறுவோம்னு தூதுவரிடம் சொன்னாங்களாம்... அந்த கோரிக்கையையும் இலை கட்சி நிராகரித்துவிட்டதாம்...’’ என்று சொன்னார் விக்கியானந்தா. ‘‘புழல் சிறை பூகம்பம் வேலூர் ஜெயில்ல எதிரொலிச்சு இருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் மத்திய சிறை நேர்முக உதவியாளர் ரங்கம் கடவுளின் பெயர் கொண்டவர். இவர் சென்னையில் இருந்து நாள்தோறும் காட்பாடிக்கு ரயிலில் வர்றார். இவரை  மத்திய சிறை தபால் காவலர் ஒருவர்தான் காட்பாடியில் பிக்அப் செய்ய வேண்டுமாம். பின்னர் மாலையில் பிசிபி காவலர் ஒருவர்தான் பைக்கில் காட்பாடி ரயில் நிலையத்தில் சென்று விட வேண்டுமாம். வேலூர் சிறைக் காவலர்களுக்கு  டிஏ பில், இஎல், லோன் உள்ளிட்டவை கையெழுத்து போட வேண்டும் என்றால் அவருக்கு தர வேண்டியதை தந்தால்தான் வேலை நடக்குமாம். மாமூல் வராவிட்டால்  நேர்முக உதவியாளர் காவலர்களை ஆபாசமாக பேசுகிறாராம். மேலும் சப்-ஜெயில்களில் இருந்து மாதம், வாரம் என இவருக்கு மாமூல் கொடுக்க வேண்டுமாம். இதற்காக 4 பேரை உதவியாளர்களாக வைத்துக் கொண்டுள்ளாராம். இவர்கள்தான் எல்லோரையும் மிரட்டி வசூல் செய்வார்களாம்... இதனால் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ள சிறை காவலர்கள் சிறைத்துறை டிஜிபிக்கும் முதல்வருக்கும் வேலூர் சிறையில் நடக்கும் ஊழல்களை அப்படியே புட்டுபுட்டு வைக்கப்போறாங்களாம்... இதற்காக தயாராகி வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி இன்னும் மார்க்கெட்டுக்கே வரவில்லை...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகர் மாவட்ட இலை கட்சி நிர்வாகிகள் கூட்டம் சமீபத்துல நடந்ததாம்.  அந்த கூட்டத்துல ஜெ., பிறந்தநாளைக்கு மாங்கனி மாநகருக்கு வரும் தமிழகத்தின் விவிஐபி, துணை விவிஐபியை உற்சாகமாக வரவேற்க வேண்டும்னு முக்கிய நிர்வாகிகள் எல்லாரும் பேசினாங்களாம். முன்னாள் மா.செ.,வும், மாஜி எம்எல்ஏவுமா இருந்தவரு மட்டும் விவிஐபியை புகழ்ந்து தள்ளிட்டாராம். பொங்கல் வந்தப்ப ஆயிரம் ரூபாய் கொடுத்து நம்ம விவிஐபி முதல் சிக்சரு அடிச்சார். இப்போது இரண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்த சிக்சர அடிச்சிட்டாரு... இன்னும் பல சிக்சர்களை அடிச்சு நம்மள உச்சத்துக்கு கொண்டு போக போறாருன்னு அள்ளித்தெளித்து விட்டாராம். இதையெல்லாம் கேட்ட நிர்வாகிகள், எம்பி சீட் கேட்டு மனு போட்டுருக்கு.. கட்சி இரண்டா உடைஞ்ச காலத்துல துணை விவிஐபி பக்கம் இருந்துட்டு, அவர் சேரும்போது சேர்ந்தாரு. இதனால் தனக்கு சீட் தரனுமுனா விவிஐபி கரிசனம் தேவையினு புகழ்ந்து தள்ளிட்டாருய்யான்னு பரபரப்பா பேசிக்கிட்டாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எங்கிருந்தால் பதவி கிடைக்கும்னு அரசியல்வாதிகளுக்கு சொல்லியா தரணும்... அதைதான் மாங்கனி மாவட்ட மாஜி அமைச்சர் செய்துட்டு வர்றாரு... அப்புறம் வேறு என்ன மேட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டில பதிவாளர், கன்ட்ரோலர் போஸ்டிங், ரொம்ப நாளா காலியா இருக்குறது பழைய சங்கதி தான். ஆனால், நியமனம் முடியற வரைக்கும் புதுசுபுதுசா எதாவது ஒன்னு கிளம்பிகிட்டு இருக்கு. சமீபத்துல பதிவாளர் நியமனம் தொடர்பா துறையோட, ‘லவ்வானவரை’ சந்திக்க விசி போயிருக்காரு. இப்போ இன்சார்ஜ்ல இருக்குற, அவரோட சமுதாயத்தை சேர்ந்த ஒருத்தர விசி ரெக்கமண்ட் பண்ணாராம். சரி அப்படியே பண்ணிடலாம், ஒரு ரூ.75 லகரம் மட்டும் ஒதுக்கிட்டா போதும்னு பதில் வந்துச்சாம். இப்போ அதுக்கான வேல தான் நடந்துகிட்டு இருக்கு. ஆனா என்ன ஒதுக்கீடு பண்ணாலும் ஒன்னும் ஆகப்போறது இல்லனு புது தகவலும் ஓடிக்கிட்டு இருக்கு. தன்னோட சொந்த ஊரு, ஒரே சமுதாயத்தை சேர்ந்த ஒருத்தருக்கு பதிவாளராக போடத்தான் லவ்வானவரு முடிவு செஞ்சிருக்காராம். இதனால ரொம்ப நாளைக்கு முன்னாடி இங்க இருந்து காரைக்குடிக்கு போன பேராசிரியருக்குத்தான் வாய்ப்புனு பேசிக்கிறாங்க. போட்டியில நீயா, நானானு மந்திரியோட விசியும் மல்லுக்கட்டிட்டு தான் இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்