SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் வாகனத்தை உடைத்த ரவுடி கைது

2019-02-17@ 05:03:42

சென்னை: செம்மஞ்சேரி காவல் நிலைய ஏட்டு ராஜேந்திரன் தலைமையில் போலீசார் கடந்த 13ம் தேதி, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள காவல் சேவை மையம் அருகே ரோந்து சென்றபோது, அங்கு வீச்சரிவாள்களுடன் வந்த 2 பேர், போலீஸ் வாகனத்தை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அவ்வழியாக வந்த ஆட்டோ, கால்டாக்சி ஆகியவற்றையும் வெட்டிவிட்டு தப்பினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கொட்டை சப்பி என்ற சுரேஷ் (24) என்பவர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர். அவரது கூட்டாளியை தேடிவருகின்றனர்.
* துரைப்பாக்கத்தை சேர்ந்த ராமலட்சுமி (43), நேற்று முன்தினம் தாம்பரத்தில் இருந்து மாநகர பஸ்சில் துரைப்பாக்கம்  சென்றபோது, இவரது பையில் இருந்த 40 சவரன் நகையை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.
* செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
* வேளச்சேரி அடுத்த நன்மங்கலத்தை சேர்ந்தவர் பழனி (42). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவரை மனைவி கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த பழனி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
* பழைய பெருங்களத்தூர், ரங்கா நகரை சேர்ந்த மாதையன் (34), தமிழரசன் (32) ஆகியோர் தங்களது வீட்டு முன் நிறுத்திய பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
* பிராட்வேயில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்க ஐயப்பன்தாங்கலுக்கு புறப்பட்ட மாநகர பஸ், அண்ணா மேம்பாலம் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் கற்களை வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினர்.
* போரூர், சபரி நகரை சேர்ந்த நாகராஜன் (30), குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
* ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனி 2வது தெருவை சேர்ந்த சுப்ரியா (43) என்பவரது மொபட்டை திருடிய ராயப்பேட்டை, லாயிட்ஸ் ரோடு, சுதந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

புதுப்பெண் மர்ம மரணம்
திருநெல்வேலியை சேர்ந்த சிவசங்கரன் (35) என்பவர், விருதாச்சலத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நித்யா (29) என்பவரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள், திருவான்மியூர் காமராஜ் நகரில் வசித்து வந்தனர். நேற்று மாலை அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த திருவான்மியூர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நித்யா மின் விசிறியில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ‘‘நித்யா தனது சகோதரிக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளார். அதில், சிவசங்கரன் ஏற்கனவே திருமணமானவர். என்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்துள்ளார். என்னை மன்னித்து விடுங்கள்,’’ என்று குறிப்பிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள சிவசங்கரனை தேடி போலீசார் திருநெல்வேலி விரைந்துள்ளனர்.

சிறுமி மீட்பு
மயிலாடுதுறை மேலநல்லூரை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயிலில் வந்தபோது, தன்னுடன் வந்த பெண் பயணியிடம், ‘‘நான் என் காதலனுடன் கோவையில் இருந்து வந்தேன். பாதி வழியிலேயே அவர் என்னை விட்டு சென்று விட்டார். என்ன செய்வது? என்று தெரியவில்லை,’’ என்று அழுது புலம்பியுள்ளார். சென்ட்ரல் வந்ததும், ரயில்வே பாதுகாப்பு படையிடம் அந்த சிறுமி ஒப்படைக்கப்பட்டார். போலீசார், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அந்த சிறுமி அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்