SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திப்பம்பட்டியிலிருந்து 15 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலையில் மின் விளக்கு இல்லை

2019-02-16@ 12:42:48

* வாகன ஓட்டிகள் அச்சம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி புறவழிச்சாலையானது திப்பம்பட்டியிலிருந்து முதல் ஆச்சிப்பட்டி வரையிலான 15 கி.மீ., தூரத்திற்கு மின் விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.  பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடுகளான பல்லடம் ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட  ரோடுகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. இந்த ரோடு வழியாக நகர் பகுதிக்கு அதிகளவு வாகனங்கள் சென்று வருவதால், அடிக்கடி விபத்து மட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

 இதையடுத்து, நகர் வழியாக கோவை மற்றும் உடுமலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு வட்ட புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலையானது, உடுமலை ரோடு திப்பம்பட்டியிலிருந்து துவங்கி ஆச்சிப்பட்டி வரை சுமார் 15 கி.மீ., தூரத்துக்கு புதிய ரோடு அமைக்கப்பட்டதுடன், அதன் செயல்பாடு சுமார் 5 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

 இதனால், இந்த வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேரம் என தொடர்ந்து போக்குவரத்து உள்ளது. தற்போது இருசக்கர வாகனங்கள் முதல், கனரக வாகனங்கள் வரையிலும் கிழக்கு வட்ட புறவழிச்சாலை வழியாக செல்வதை காணமுடிகிறது. தினந்தோறும் வாகனங்கள் அதிகரித்து கொண்டு இருக்கும் இந்த வேளையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்ட முக்கிய இடங்களில் உயர் மின்கம்பம் ஏற்படுத்தி மின்விளக்கு அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளாதல் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், திப்பம்பட்டி, அனுப்பர்பாளையம், தொப்பம்பட்டி என நான்கு ரோடு சந்திக்கும் பகுதிகளில் உயர் மின்கோபுரம் ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அனுப்பர்பாளையத்தில் மட்டும் ஒரு பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் உயர் மின்கோபுரம் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

  அதுமட்டுமின்றி புறவழிச்சாலையில் வளைவுகள் அதிகம் உள்ளதால், இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாததால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.கடந்த 5 மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, திப்பம்பட்டியிலிருந்து துவங்கி கோவை ரோடு ஆச்சிப்பட்டி வரையிலும் உள்ள புறவழிச்சாலையின் முக்கிய இடங்களில் உயர் மின்கோபுரம் அல்லது கம்பம் ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்