SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விருதுநகர் புதிய பஸ்நிலையத்தில் இடிந்து விழும் கைப்பிடிச் சுவர்கள்

2019-02-16@ 12:32:40

விருதுநகர் : விருதுநகர் புதிய பஸ்நிலையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேற்கூரை கைப்பிடிச்சுவர்களை இடித்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். விருதுநகரில் நகர விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு கடந்த 1992ல் ரூ.77 லட்சத்தில் சாத்தூர் ரோட்டில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. இங்கும் பஸ்கள் எதுவும் வராததால், பயனற்ற நிலையில் உள்ளது. மேலும், பஸ் நிலையத்தை முறையாக பராமரிக்காததால் பாழடைந்து காணப்படுகிறது.

பஸ் நிலையத்தின் மேற்கூரை சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்து வந்தன. இதை தொடர்ந்து பஸ்நிறுத்த பகுதியில், சுற்றுச்சுவர்கள் இடித்து அகற்றப்பட்டு மொட்டை மாளிகையாக காட்சி தருகிறது. இந்நிலையில், பஸ்நிலைய கட்டிடத்தின் நுழைவுப்பகுதியில் உள்ள அலுவலக மற்றும் கடைகளின் மேற்கூரை கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுகின்றன. இந்த பகுதியில் வரும் நபர்களின் மேல் கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன், அபாயகரமான நிலையில் உள்ள மேற்கூரை கைப்பிடி சுவர்களை இடித்து அகற்ற வேண்டும்.

பஸ் நிலையத்தின் மேற்கூரையில் இடித்து அகற்றப்பட்ட பகுதிகளில் கைப்பிடி சுவர்களை தரமான முறையில் உடனடியாக கட்டவும், மெயின்பஜார் வழியாக பஸ்கள் செல்ல ஏற்பாடு செய்ததை போல புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்