SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரையும் காரைகள்... விரிவடையும் விரிசல்கள்... பராமரிப்பு இல்லாத கட்டிடத்தில் சிகிச்சை பெறும் பாலகர்கள்

2019-02-16@ 11:53:46

* நம்ம ஜிஹெச்சில்தான் இந்த நிலைமை
* உடனே புதுப்பிக்க சொல்றாங்க மக்கள்

மதுரை : காரைகள் பெயர்ந்து, சுவர்களில் விரிசல்களோடு ஆபத்தான நிலையில்  மதுரை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது.  மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலத்துறையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, தீக்காயப்பிரிவு, அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் அதற்கான நிபுணத்துவம் பெற்ற குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்களும் உள்ளனர்.

இதனால் தென்மாட்ட அளவில், மேல்சிகிச்சைக்காகவும் சிறப்பு சிகிச்சைக்காகவும் ஏராளமான  குழந்தைகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த குழந்தைகள் நல பிரிவு செயல்படும் கட்டிடம் போதுமான பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் வெளிப்புறம் மட்டுமே, பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில், கட்டிடத்தில் பின்புறம் மற்றும் மாடிக்கு செல்லும் வழி மற்றும் சுவர்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

 
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ``மருத்துவமனையில் புதுப்புது கட்டிடங்களை கட்டுகிறார்களே தவிர, பழைய கட்டிடங்களை பராமரிப்பதில்லை, அப்படியே பராமரித்தாலும் பெயரளவிற்கு ஏனோ, தானோ என்றுதான் இருக்கிறது. நுற்றுக்கணக்கான குழந்தைகள் சிகிச்சை பெரும் இந்த வார்டை யாரும் கண்டுகொள்வதில்லை, மொட்டை மாடிக்கு சென்று சுற்றிப்பார்த்தாலே, இந்த கட்டிடம் மோசமான நிலையில் உள்ளதை தெரிந்துகொள்ளலாம்.

இடிந்து விழும் நிலையில் கசிந்து கொண்டிருந்த தண்ணீர் தொட்டியை, அரைகுறையாக சமீபத்தில்தான் சரிசெய்துள்ளனர். வார்டுகள், மருத்துவர்களின் வகுப்பறை, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜன்னல்கள் துருப்பிடித்து மூடவும் முடியாமல், திறக்கவும் முடியாமல் உள்ளது. அவ்வப்போது நிதி ஒதுக்கி, முறையாக பராமரிக்காததே இந்த நிலைககு காரணம். இனியாவது காலம் தாழ்த்தாமல் உடனடியாக குழந்தைகள் நலப்பிரிவை புதுப்பிக்க வேண்டும்’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்