SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுடுகிறது

2019-02-15@ 04:18:10

பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 31 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு விஆர்எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இதை பார்க்கும்போது ரயில்வேயையும் கூட இன்னும் இரு தசாப்தங்களில் நஷ்டம் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்த்து விடுவார்களோ என்ற அச்சம்தான் எழும்புகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு தரைவழி இணைப்பை வாங்குவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருந்த காலம் எங்கே? இப்போது தனியார் துறையுடன் போட்டிப் போட முடியாமல் ஒரு பொதுத்துறை நிறுவனம் மூடப்படுகிறது என்றால், அரசு நிறுவனம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும். பொதுத்துறை நிறுவனங்கள் என்பது மக்களின் பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பாகும். அதை பாதுகாப்பது மக்களையே பாதுகாப்பதற்கு சமம். ஆனால், மத்திய அரசு இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், பொதுத்துறை நிறுவனங்கள் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன என்ற ரீதியில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

ஏற்கனவே, ஏர் இந்தியா விமான நிறுவனம், எச்ஏஎல் நிறுவனம் போன்றவை பேராபத்தில் உள்ளன. ஏர் இந்தியா நிறுவனத்தில்தான் பயணம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் முதல் எம்.பி.க்கள் வரையில் உத்தரவிட்டிருந்தாலே பெருமளவு தொகை அதற்கு கிடைத்திருக்கும். மேலும், அரசின் நிறுவனமான எச்ஏஎல்.லுக்கு ரபேல் விமான ஒருங்கிணைப்பு கொடுக்காமல், தனியார் நிறுவனத்துக்கு அள்ளி கொடுத்திருக்
கிறது மத்திய அரசு. ஒருபுறம் இது வேதனை என்றால், வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், எச்ஏஎல் நிறுவனத்தில் தயாரித்த பாகங்களை பயன்படுத்தினால் பறக்கும்போதே உருண்டு ஓடிவிடும் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். அப்படியென்றால், மோடி ஒரு பொய்யர் என்பதை மத்திய அமைச்சர் ஒப்புக் கொள்கிறார் என்று தானே அர்த்தமாகும்.

எச்ஏஎல் தயாரித்த விமானங்களை பாராட்டி பேசிய பிரதமர் மோடி, உலகத்தரத்திலான விமானத்தை தயாரித்துள்ளது என்று அதை பாராட்டினார். அப்படி பாராட்டியபோது, திருவாளர் வி.கே.சிங் எங்கே இருந்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். பொதுத்துறை நிறுவனங்களையே காப்பாற்ற முடியாத மோடி, மக்களையா காப்பாற்றப் போகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டுள்ள கேள்வி, மத்திய அரசுக்கு சுடாவிட்டாலும், வாக்களித்த விரல்களை சுட்டுக் கொண்டிருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்