SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை : உடல்நலத்தை காக்க புதிய முயற்சி

2019-02-14@ 12:47:47

மணப்பாறை: வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக மணியோசை ஒலிக்கப்படுகிறது. இதனால் உடல்நலத்தை காக்கும் வகையில் மாணவர்கள் தினமும் தண்ணீர் குடிப்பதை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நூலகம் ஒன்று நீண்ட நாட்களாக செயல்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மதியாஸ் முயற்சியால் நூலகத்தை சுத்தம் செய்து புதிய நூல்களை வாங்கி வந்து மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு மீண்டும் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு நாளேடுகளும் வாங்கி வைக்கப்படுகின்றன. இதனால் மாணவ மாணவிகள் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்கின்றனர். மேலும் நூலகத்தில் படித்த நூல்களில் பிடித்ததை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் நமக்கு தேவையான குடிநீரை மாணவர்கள் தினமும் குறிப்பிட்ட அளவில் குடிக்க வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் தண்ணீர் குடித்து உடல்நலத்தை காக்கும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவ, மாணவிகள் தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தண்ணீர் குடிப்பதற்கு தனியாக மணி ஒலிக்கப்படுகிறது. அப்போது மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்தபடியே தண்ணீர் குடித்துக் கொள்கின்றனர். மேலும் இதேபோன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும் சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்னனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்