SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயக்கும் தந்திரம்

2019-02-14@ 00:14:55

2 ஹெக்டேர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ₹6 ஆயிரம் மானியம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் போதே தமிழகத்தில் பரபரப்பு  தொற்றிக்கொண்டது. அடுத்தது தமிழக பட்ஜெட்தான். மக்களவை தேர்தலை முன்னிட்டு சலுகை மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ₹2 ஆயிரம் வழங்கும் ‘அற்புத திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.2 ஆயிரம் ரூபாய் வழங்கி விட்டால் வறுமை ஒழிந்து விடும்தானே?. ஏழ்மை அகன்று விடும் தானே? தமிழகத்தில் இருந்து ஏழை, எளிய மக்கள் என்ற பட்டியல் அகன்று விடும்தானே?. அப்படியானால் இந்த திட்டம் அற்புத  திட்டம் தானே?. மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் குடும்பங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்பேரவையில் முதல்வர்  எடப்பாடி வாசித்த அறிக்கையில் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அன்னயோஜனா திட்டத்தில் 60 லட்சம் குடும்பங்களை சேர்க்க தமிழக அரசு ஏன்  நடவடிக்கை எடுக்கவில்லை?. அவர்களுக்கும் மத்திய அரசு வழங்கும் 35 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை கிடைக்கும் அல்லவா?
இத்தனை ஆண்டு காலம் 18 லட்சம் குடும்பம் மட்டும் தான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக தெரிவித்த தமிழக அரசு இப்போது 60 லட்சம் குடும்பங்கள் என்று எண்ணிக்கையை உயர்த்தி அறிவித்து இருக்கிறது. அப்படியானால்  2011 முதல் 2019 வரை தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை அதிமுக அரசு கீழ்நிலைக்கு தள்ளிவிட்டதா?.

பிப்ரவரி இறுதியைக்கூட எட்டவில்லை. அதற்குள் வெயில் சுட்டெரிக்கிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் குடிநீர் இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள நிதி  ஒதுக்கப்படவில்லை. காவிரியில் கடந்த ஆண்டு கட்டுக்கடங்காமல் ஓடி கடலில் கலந்த தண்ணீரை தேக்கி, டெல்டாவை வளம் கொழிக்க வைக்கும் அவசர கால திட்டத்திற்கு வழிவகை இல்லை. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் என்று வரிசையாக ஜெயலலிதா தொடங்கி வைத்த எத்தனையோ திட்டங்கள் நலிந்து போய் கொண்டு இருக்கிறது. மின்கட்டணம், பஸ் கட்டணம், பால் விலையை குறைக்க  வழிவகை இல்லை. தரமில்லாத சாலைகள், தகுதியற்ற பள்ளிக்கட்டிடங்கள், தரம் உயர்த்தும் மருத்துவ வசதிகள் என்று எதுவுமே இல்லை.  விவசாயத்தை வளர்ச்சி அடைய வைக்கும் வழிகளும் இல்லை. 1 கோடியை தொட்டுவிட்ட வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையையும், கட்டுக்கடங்காமல் தமிழகத்திற்குள் நுழையும் வெளிமாநிலத்தவரின்  படையெடுப்பையும் தடுக்க முடியவில்லை. டாஸ்மாக்கை தவிர அரசு வருமானத்தை பெருக்கும் முறையும் இல்லை. ஆனால் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹2 ஆயிரம் வழங்க ₹1200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது.  இதில் வாக்காளர்களை மயக்கும் தந்திரம் தான் தெரிகிறதே தவிர வேறு எதுவும் இல்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்