SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோட்டில் பணம் இரட்டிப்பு மோசடி: பெண் உள்பட 7 பேர் சிக்கினர்

2019-02-13@ 01:01:46

ஈரோடு:  ஈரோடு நாராயணவலசு நசியனூர் சாலையை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் பிரபாகரன் (24). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் கார்  டிரைவராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். அவருக்கு பவானி மேற்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி (65) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.  அப்போது, பழனிச்சாமி தனக்கு தெரிந்த பெங்களூருவை சேர்ந்த நபர்கள் பணம் இரட்டிப்பு செய்து கொடுப்பதாகவும், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் 2 மடங்காக ரூ.1  லட்சம் பணம் கொடுப்பார்கள் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய பிரபாகரன், தன்னை அந்த கும்பலிடம் அறிமுகம் செய்து வைக்குமாறு பழனிசாமியிடம் கேட்டார். இதன்படி, நேற்று முன்தினம் காலை ஈரோடு  வஉசி பார்க்கில் வைத்து பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் உள்பட அந்த கும்பலை பிரபாகரனுக்கு, அறிமுகம் செய்து வைத்தார் பழனிச்சாமி. காரில்  அமர்ந்திருந்த அந்த கும்பலிடம் பிரபாகரன், தான் கொண்டு வந்த ₹50 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது, காரில் இருந்த கும்பல், 2 நோட்டுக் கட்டுக்களை  பிரபாகரனிடம் கொடுத்தனர். பணத்தை தற்போது எண்ண வேண்டாம். வீட்டிற்கு சென்று எண்ணும்படி கூறிவிட்டு புறப்பட்டனர்.

அவர்கள் கொடுத்த பணத்தை வீட்டில் எண்ணும்போது பணக்கட்டில் மேல் மற்றும் கீழ் பகுதியில் மட்டும் 500 ரூபாய் நோட்டை வைத்துவிட்டு மற்ற நோட்டுகள்  அனைத்தும் வெற்று பேப்பர்களாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாகரன், ஈரோடு வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஈரோடு- சத்தி  சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாமரத்துப்பாளையம் என்ற இடத்தில் சோதனை நடத்தியபோது பண மோசடி கும்பலை போலீசார்  மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையில், தர்மபுரியை சேர்ந்த நாகராஜ் (40), பவானி பழனிச்சாமி (65), விருதுநகரை சேர்ந்த தங்கமணி (52), பவானியை சேர்ந்த சுரேஷ்குமார் (38), சதீஷ்  (32), பெங்களூருைவ சேர்ந்த மஞ்சுநாத் மனைவி யசோதா (55), ரகு என்கிற ராகவேந்திரா (37)  என தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 போலி பணக்கட்டுகள், ஒரு கார், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்