SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் விளக்கம்

2019-02-13@ 01:00:59

சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி  விளக்கம் அளித்துள்ளார்.கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார்(திமுக) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: பாலாற்றில்  ஆந்திர அரசு 33 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்கனவே கட்டியுள்ள 21 தடுப்பணைகளை புதுப்பிக்கவும், பழுது பார்க்கவும் சுமார் ₹43 கோடி ஒதுக்கியுள்ளது.  மேலும் புதிதாக 500 மீட்டர் இடைவெளியில் சுமார் 30 புதிய தடுப்பணைகளையும் கட்ட உள்ளது. ஆந்திர அரசு கட்டுகின்ற அந்த தடுப்பணைகளை விரைந்து  நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்றார். இதே கோரிக்கையை வலியுறுத்தி குளச்சல் தொகுதி பிரின்ஸ்(காங்கிரஸ்) பேசினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியதாவது: சித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு  அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், செய்தி தாள்களில் 4.1.2006 அன்று தகவல்கள் வெளிவந்தபோது, 5.1.2006 அன்றே,  ஜெயலலிதா 1892ம் ஆண்டைய ஒப்பந்தத்தை சுட்டி காட்டி, ஆந்திர அரசு அணைகட்டும் பணியினை மேற்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொண்டார்.  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அணைக்கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன.  இந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு  ஜுலை 2019ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது.   தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

 உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும்  உயர்த்தக்கூடாது என மத்திய நீர் வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார். ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக  தகவல்கள் வெளியானது. பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி,  உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஒரு மனு ஒன்றை கடந்த நவம்பர் 19ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.  ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக கடந்த 5ம் தேதி செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள்  கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது.  

உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது. அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு  அறிவுரை வழங்குமாறு கடந்த 6ம் தேதி ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாலாறு நதிநீர் பிரச்சனையில், அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும்,  சட்டரீதியாகவும், பிரச்சனையை தொடர்ந்து அணுகி வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினரின் இறுதிசடங்கு செலவுக்கு ரூ.2,500

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நேற்றைய தினம் எதிர்க்கட்சி  துணைத் தலைவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈமச்சடங்கு நிதி சரியாக போய்  சேரவில்லை என்ற கருத்தை இங்கே கூறினார். ஆதிதிராவிடர், பழங்குடியினர்  மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தவர்களில் எவரேனும் இறந்தால்  அவர்களது இறுதி சடங்கு  செலவுகளுக்காக இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2,500  வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நலத்துறைக்கு  ஆண்டுதோறும் ரூ.5 கோடி  ஒதுக்கீடு செய்கிறது. 2018-19ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.5 கோடியில் இதுவரை ரூ.4.67 கோடி உதவித்தொகை 18,692 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi_viruthu_iyo1

  அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

 • mumbai_vivasayigal11

  மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்