SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டம் ஒழுங்கு பிரச்னை திமுக சரமாரி புகார்; முதல்வர் பதில்

2019-02-13@ 00:58:56

சென்னை: பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது திமுக உறுப்பினர் பட்ஜெட் மீதான விமர்சனங்களை சொன்னதால்,  அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கன்னியாகுமரி ஆஸ்டின் (திமுக): இந்த பட்ஜெட்டின் நிலை என்னவென்றால், நீண்ட ஏமாற்றமான பட்ஜெட் என்று ெசால்ல வேண்டும். பட்ஜெட்டில் அமைதி,  வளம், வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் தமிழகத்தில் எங்கே அமைதி இருக்கிறது. பல இடங்களில் கொலை, கொள்ளை நடக்கிறது என்று பேசிய  உறுப்பினர் ஆஸ்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக பேசினார். அப்போது இடை மறித்து முதல்வர் பேசினார். முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி: அது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. அது பற்றி பேசவேண்டியதில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து உறுப்பினர் பேசினார்.  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்காக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம்தான் முதன்மை மாநிலம் என்றும்  தெரிவித்துள்ளது.
சபாநாயகர்: உறுப்பினர் பேசும் போது ஆதாரம் இல்லாமல் பேசினார். அவர் பேசியவை அவைக்குறிப்பில் இருந்துநீக்கப்படுகிறது.

ஆஸ்டின்: சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும் என்று கூறினீர்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று நான் கூறவில்லை. சட்டியில் இருப்பதை அனைத்து துறைகளுக்கும்  பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்று நான் சொன்னேன். சபாநாயகர்: பொதுவாக குறைகள் கூறிக்கொண்டு இருக்காதீர்கள். அமைச்சர் பதில் கூற வாய்ப்பு கொடுங்கள். அதுவரை அமைதியாக இருங்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர் ெசல்வம்: அமைச்சர் பதில் கூறும் போது ஒப்பிட்டுப் பேசுகிறார். உங்கள் ஆட்சியில் ஒரு மடங்கு செய்தது, எங்கள் ஆட்சியில் 10  மடங்காக செய்யப்பட்டுள்ளது. அதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ‘உங்கள் தலைவர்’ என்று அவையில் இல்லாத ஒருவரை அமைச்சர்  கூறினார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். சபாநாயகர்: அமைச்சர் கூறிய அந்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

இம்மாத இறுதிக்குள் ரூ.2000 கிடைக்கும்: ஆஸ்டின்: இந்த பட்ஜெட்டில் பேசும்படியாக எந்த திட்டமும் இல்லை. மேலும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வும் இந்த பட்ஜெட்டில்  இல்லை. 1 கோடிக்கும் மேல் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். மக்கள் கொதித்த நிலையில் இருக்கின்றனர். அனைத்து மக்களையும்  ஏமாற்றும் பட்ஜெட் இது. மேலும், இதில் அறிவிக்கப்பட்ட ரூ.2000 வழங்குவது கடந்த பட்ஜெட்டில் அறிவித்து இருக்கலாம். இந்த பட்ஜெட்டில் அதை சேர்த்ததால்,  அது இன்னும் நீண்டுகொண்டே போகும். முதல்வர்: அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த மாத இறுதியில் ரூ.2000 என்பது அந்தந்த நபர்களின் வங்கிக் கணக்கில் போடப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்