SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் செங்கோட்டையன் பதில் 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தமிழகத்தில் அமலாகுமா?

2019-02-13@ 00:56:25

சென்னை: சட்டப் பேரவையில் நாகப்பட்டினம் தமிமுன் அன்சாரி (மஜக): பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து பாடத்திட்டத்தில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. அமைச்சர் செங்கோட்டையன்: இது தவறான செய்தி. 7ம் வகுப்பு பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி இடம்பெற உள்ளது. அதில் தவறான  விஷயங்கள் உள்ளதாக கூறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிமுன் அன்சாரி: 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று கூறப்படுகிறது. இதனால் தொடக்ககல்வி படிப்போர் கல்வி பாதிக்கப்படும்.அதை அரசு பரிசீலிக்க  வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில் இன்னும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருச்சுழி தங்கம் தென்னரசு (திமுக): அமைச்சர் இது குறித்து முடிவு எடுக்கவில்லை என்கிறார். இது முக்கியமான விஷயம். அமைச்சர் செங்கோட்டையன்: அமைச்சரவை கூடித்தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

டிக் டாக்குக்கு தடையா?: தமிமுன் அன்சாரி: டிக் டாக் செயலி தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, அதை தடை செய்ய  வேண்டும். அமைச்சர் மணிகண்டன்: டிக் டாக் செயலி மூலம் தமிழகத்தில் கலாச்சாரம், பண்பாடு பாதிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் சார்பில் புகார், கருத்துகள்  வருகின்றன. மத்திய அரசிடம் இதுகுறித்து அழுத்தம் கொடுத்து அதை தடை செய்ய முதலவர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்