SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மு.க.ஸ்டாலின் கேள்வியால் பேரவையில் பரபரப்பு: மக்களவையில் தம்பிதுரை பேசியது அவர் கருத்தா, அதிமுக கருத்தா?

2019-02-13@ 00:55:37

சென்னை: மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசியதில் தவறு இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார்  கூறினார். திமுக உறுப்பினர் பொன்முடி: திமுக ஆட்சியில், விவசாயிகள் கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.  அமைச்சர் செல்லூர் ராஜூ: 2016 ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வாங்கிய, குறு, சிறு விவசாயிகளின் ரூ.5,318 கோடி  தள்ளுபடி செய்யப்பட்டது.  துரைமுருகன்: கலைஞர் பண்ணை சாரா விவசாயிகள் உள்பட சிறு, குறு விவசாயிகள் என அனைவருக்கும் பயிர் கடனாக ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி  செய்து நாங்களும் அதற்கான சான்றிதழ் கொடுத்தோம். ஆனால் அமைச்சர் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறார். அது தவறான தகவல். செல்லூர் ராஜூ: இதை நீங்கள் சட்டமன்றத்தில் நிரூபியுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்: திமுக ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்பது உண்மைதான். கடன் தள்ளுபடி செய்யப்பட்டது உண்மையா?  இல்லையா?
முதல்வர் எடப்பாடி: தள்ளுபடி அறிவித்தது உண்மைதான். ஆனால் சுமார் ரூ.5,200 கோடி அளவுக்குத்தான் தள்ளுபடி செய்யப்பட்டதாக கணக்கில் உள்ளது.  அறிவிக்கப்பட்ட தொகை அதிகம். ஆனால் கொடுத்த தொகை குறைவு. ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அரசுதான், வறட்சிக்கும் நிவாரணம் வழங்கிய  அரசு. பொன்முடி: மறுபடியும் சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய தயாரா?

முதல்வர்: வறட்சியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கத்தான் காப்பீட்டு திட்டத்திலே விவசாயிகளை இடம்பெற செய்திருக்கின்றோம். 2017-18ம் ஆண்டு,  காப்பீட்டு நிறுவனங்களால் ரூ.1128 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 822 விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 996 கோடி  ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 717 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 747 கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி: அத்திக்கடவு-அவினாசி திட்டம் 2011ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இன்னும் ஆரம்ப கட்ட  வேலைகூட நடைபெறவில்லை.

முதல்வர்: தற்போது ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அது இந்த வாரத்தில் இறுதி செய்யப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.பொன்முடி: மக்களவையில் பேசிய உங்கள் எம்பி தம்பிதுரை, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள் முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் பேசியுள்ளது, தனிப்பட்ட கருத்தா, கட்சியின் கருத்தா?அமைச்சர் ஜெயக்குமார்: எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதால்தான் நாங்கள் ஜிஎஸ்டியை ஆதரித்தோம்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் பொன்முடி கேட்டது பாராளுமன்றத்தில் தம்பிதுரை பேசியது ,அவர் கருத்தா? இந்த அரசின் கருத்தா? என்று
கூறுங்கள்.அமைச்சர் ஜெயகுமார்: மத்திய அரசு, தமிழக அரசுக்கு தர வேண்டிய  நிதி குறித்து தெளிவாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதைத்தான் அவர்  (தம்பிதுரை) கூறியுள்ளார். இந்த அரசை பொறுத்தவரை தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்யும் நல்ல விஷயங்களை ஆதரிப்போம். மக்களுக்கு எதிரானது  என்றால் எதிர்ப்போம். இதைத்தான் தம்பிதுரை கூறி இருக்கிறார்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் பந்தில் முதல்வர் கிளீன் போல்டு:  பொன்முடி: 2005-2006ம் ஆண்டில்  22.25 சதவீதமாக இருந்த தமிழக அரசின் கடன், கலைஞர் ஆட்சியில் 19.5 சதவீதமாக  குறைக்கப்பட்டது. இன்று 23  சதவீதமாக்கி இருக்கிறீர்கள். நேற்று செம்மலை  (அதிமுக) பேசும்போது முதல்வர் திட்டங்களை அறிவித்து சிக்சராக அடிக்கிறார்  என்றார். நிச்சயமாக எங்கள்  தலைவர் (மு.க.ஸ்டாலின்) போடும் பந்தில் முதல்வர் கிளீன் போல்டு  ஆகி விடுவார். அமைச்சர் ஜெயகுமார்: நான் கூறுகிறேன். நிச்சயம் அது நோ பால் ஆகத்தான் இருக்கும். அமைச்சர் தங்கமணி: மைதானத்திற்கு வந்து பந்து வீசினால் தானே. மைதானத்திற்கே வரவில்லை என்றால்...

தேர்தலுக்காக ரூ.2000 அறிவிப்பா?

திமுக உறுப்பினர் பொன்முடி: வறுமை  கோட்டுக்குள் இருக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக  அறிவித்தார். அதுதான் நிஜ பட்ஜெட். துணை முதல்வர் தாக்கல் செய்தது நிழல்  பட்ஜெட். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: வறட்சி காரணமாக விவசாய  தொழிலாளர்கள், கஜா புயல் பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினர் வேலை இல்லாமல்   உள்ளனர். இதனால்தான் ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 அறிவிக்கப்பட்டது.  இது தேர்தலுக்காக அல்ல.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்