SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

டிக் டாக்கிற்கு தடை விதித்தால் சந்தோஷம் தான் தேர்தல் கூட்டணி அமைக்க கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

2019-02-13@ 00:54:40

சென்னை: டிக் டாக்கிற்கு தடை விதித்தால் சந்தோஷம் தான் என்றும், நாடாளுமன்றம் தேர்தல் தொடர்பாக பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடக்கிறது  என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு  பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: டிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் சந்தோஷம் அடையும் முதல் நபர் நானாக தான் இருப்பேன். பல இடங்களில் டிக் டாக்  செயலி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்காக நாளை மறுதினம் அமித்ஷா ஈரோடு வருகிறார். 15ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகம் வருகிறார். இதே போல பல்வேறு  தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். வாக்குசாவடி அளவில் எங்களை நாங்கள் பலப்படுத்தி வருகிறோம். கன்னியாகுமரிக்கு மோடி வருகை சற்று தள்ளி  போகிறது.  திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்பதற்கு நல்ல  வரவேற்பு உள்ளது. காங்கிரஸ் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி பேசிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வருக்கு பாராட்டு: தமிழக பாஜ தலைவர் தமிழிசை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ₹2 ஆயிரம்  வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளது ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் தமிழக  முதல்வருக்கு பாராட்டுக்கள்.

அதிமுக கருத்தல்ல: பாஜ தலைவர் தமிழிசை மேலும் கூறுகையில்,‘‘ மத்திய அரசுக்கு எதிராக பேசியது  தம்பிதுரையின் கருத்து. ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாக இருக்காது  என்பது தான் எனது கருத்து’’ என்றார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்