பிரதமர், முதல்வர் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் கிடையாது: உயர் நீதிமன்றம் கருத்து
2019-02-13@ 00:53:51

சென்னை: தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடாததையடுத்து சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கலந்து கொண்டார்.இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படவில்லை. இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேம்பு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தான் சமூக ஆர்வலர் என்று கூறுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தேசிய கீதம் விதிகளின் படி, பிரதமர் மற்றும் முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு ; அரசியல் பற்றி பேசவில்லை என ரஜினி விளக்கம்
சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியை முறையாக பராமரிக்க வலியுறுத்தி மாணவர்கள் சாலைமறியல்
4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி மாற்றம் ரத்து
தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 இடம் நாடாளுமன்ற சீட் பெற தலைவர்கள் போட்டா போட்டி
3 வாலிபர்களுடன் தகாத உறவா? என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் சவால்
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம்: தமிழக கவர்னர் பங்கேற்பு
அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்