SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலாபவன் மணி மர்ம மரணம் பிரபல நடிகர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை: நீதிமன்றம் அனுமதி

2019-02-13@ 00:50:52

திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம் குறித்து நடிகர்கள் ஜாபர் இடுக்கி மற்றும் ஷாபுமோன் உள்பட 7 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 3 வருடங்களுக்கு முன் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது ரத்தத்தில் பூச்சிக்கொல்லி  மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.பின்னர் இந்த வழக்கு கலாபவன் மணி உறவினர்கள் கோரிக்கைக்கு ஏற்ப சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியது. இதில் கலாபவன் மணி மரணமடைந்ததற்கு முன் அவரது  பண்ணை வீட்டில் மது விருந்து நடந்தது தெரியவந்தது. இந்த மது விருந்தில் நடிகர் ஜாபர் இடுக்கி, ஷாபுமோன் உள்பட 7 பேர் கலந்து ெகாண்டனர்.

இதையடுத்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்த ேசாதனைக்கு 7 பேரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இதற்கு அனுமதி கோரி எர்ணாகுளம் தலைமை குற்றவியல்  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.இதை விசாரித்த நீதிமன்றம், சோதனைக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து விரைவில் இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்