SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்கத்தா கமிஷனரிடம் 4வது நாளாக விசாரணை

2019-02-13@ 00:50:51

ஷில்லாங்:  கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம் நிதி நிறுவன மோசடி தொடர்பாக நான்காவது நாளாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். மேற்கு வங்கத்தில் சாரதா சீட்டு நிறுவனம் 17 லட்சம் பேரிடம் ₹10ஆயிரம் கோடி மோசடி செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய ஆவணங்களை தற்போது கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருக்கும்  ராஜிவ்குமார் அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் கடந்த 9ம் தேதி ஆஜரானார். சிபிஐ அதிகாரிகளின்  கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து வருகிறார்.

தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் ராஜிவ்குமார் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 3 நாட்களாக மொத்தம் 24 மணி நேரம் சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.அவருடன் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி குணால் கோஷையும் சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக விசாரித்தனர். அவரிடம் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து அவர் கொல்கத்தா திரும்பினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்