SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொகுசு கார் வாங்கி தவணை செலுத்தாமல் பைனான்ஸ் நிறுவன ஊழியருக்கு துப்பாக்கி காட்டிகொலை மிரட்டல்: காஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது

2019-02-13@ 00:44:17

சென்னை: சொகுசு கார் வாங்கியதோடு மாத தவணை செலுத்தாமல் பணம் கேட்டு சென்ற பைனான்ஸ் நிறுவன ஊழியரை துப்பாக்கியால் மிரட்டிய காஸ்  ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.அண்ணாநகர் மேற்கு 16வது பிரதான சாலை, ‘எச்’ பிளாக்கைச் சேர்ந்தவர் கங்கவராஜன் (60). இவர் அம்பத்தூரில் தனியார் காஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.  இவர் சமீபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ. சொகுசு காரை பைனான்ஸ் உதவியுடன் வாங்கியுள்ளார். ஆனால், கடந்த 5 மாதங்களாக காருக்கான மாத  இஎம்ஐ எனப்படும் மாத தவணை தொகையை சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தாமல் கங்கவராஜன் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அந்த பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் முருகன் (28) மாதத் தவணை தொகையை வசூலிக்க கங்கவராஜன் வீட்டிற்கு  சென்றுள்ளார், அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த கங்கவராஜன், வீட்டில் வைத்திருந்த ‘ஏர் கன்’ எனப்படும் துப்பாக்கியை எடுத்து பைனாஸ் ஊழியரை பார்த்து ‘உன்னை சுட்டு  விடுவேன், இங்கிருந்து ஓடி விடு’ என, மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி, பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து  ஓடிவந்துவிட்டார். இது குறித்து அவர் பைனான்ஸ் நிறுவனத்தில் தகவல் தெரிவித்தார். அவர்கள் அளித்த அறிவுரையின்படி முருகன் திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கிருஷ்ணா சமரசம் பேசி பிரச்னையை முடிக்க முயன்றார். ஆனால், பாதிக்கப்பட்டவர் தரப்பில் அதை ஏற்க மறுத்து வழக்கறிஞர்கள், திரண்டனர். இதையடுத்து, அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர், போலீஸ் நிலையம்  வந்து விசாரணை நடத்தினார். பின்னர் குற்றச்சாட்டுக்கு உள்ளான தொழில் அதிபரை கைது செய்யவும் உத்தரவிட்டார். அதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து  கங்கவராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்