SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் படம் திறப்பு

2019-02-13@ 00:37:26

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். மூன்று முறை பிரதமராக இருந்துள்ளதோடு, அரசின் பாரத ரத்னா விருதையும் வாஜ்பாய் பெற்றுள்ளார். அவரை கவுரவிக்கும்  வகையில், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என ஏற்கனவே நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.  இந்நிலையில் நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வாஜ்பாய் உருவப்படத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பாஜ மூத்த தலைவர் வாஜ்பாய் மிகவும் கடினமாக சூழல்களிலும் அமைதி மற்றும் மனஉறுதியோடு இருந்தவர். அவர் பொது வாழ்க்கையின் பள்ளியாக இருந்தவர்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “மக்கள் வாஜ்பாயின் பேச்சாற்றலை நினைவு கூற வேண்டும். அவரது வார்த்தைகளை விட அவரது அமைதி மிகவும் சக்திவாய்ந்தது. அவரது மவுனத்தில் ஒரு செய்தி இருந்தது.  அரசியல்  வாழ்க்கைளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும் தனது கொள்கையில் ஒருபோதும் அவர் சமரசம் செய்து கொண்டது கிடையாது. அவருக்கு அரசியலில் எதிரிகளே கிடையாது. எதிர்க்கட்சிகள் இருந்தன. ஜனநாயகத்தில் அவருக்கு  எதிரிகள் கிடையாது. புதிய தலைமுறையினரும் நாமும் இதனை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பேசுகையில், ‘‘வாஜ்பாய்க்கு நடைமுறையில் எந்த எதிரிகளுமே இல்லை” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்