SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவுக்கு அதிரடி தண்டனை: ஒரு நாள் முழுக்க நீதிமன்ற அறையில் அமர்ந்திருக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2019-02-13@ 00:17:39

புதுடெல்லி: அதிகாரியை பணியிட மாற்றம் செய்த வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சுப்ரீம் கோர்ட்; மேலும், ஒரு நாள் முழுக்க கோர்ட் அறையில் உட்காருமாறு உத்தரவிட்டது. சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் மற்றும் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பாக சிபிஐ தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.சர்மாவை மாற்றியது,  நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகள் தான் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தொடர்பாக சிபிஐயின் முன்னாள் இடைக்கால இயக்குனரான நாகேஸ்வரராவ் ஆஜரானார். இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கேகே.வேணுகோபால் வாதத்தில், சட்ட ஆலோசகரை தீவிரமாக ஆலோசித்த பின்னர் தான் நாகேஸ்வரராவ் ஏகே.சர்மாவை பணி மாற்றம் செய்துள்ளார். இதில் அவர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக்கூடாது என்று கருதவில்லை  என வாதிட்டார்.இதையடுத்து சிபிஐ தரப்பு வாதத்தில், நாகேஸ்வரராவ் ஒரு சிறந்த அதிகாரி. அவர் செய்தது தவறு என்பதால் தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இதில் தவறு என்பது மனித இயல்பு என வாதிடப்பட்டது. அப்போது கடும் கோபத்துடன் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, சம்மந்தப்பட்ட அதிகாரியை மாற்றிய பின் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று 2  முறை கால அவகாசம் தரப்பட்டது. மீறியதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பினர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பொறுத்தவரை நாகேஸ்வரராவின் விளக்கம் போதுமானதாக இல்லை. அதனை ஏற்க முடியாது. கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான  நடவடிக்கையை பார்த்தது கிடையாது இதில் நாகேஸ்வரராவின் மன்னிப்பை நீதிமன்றம் பரிசீலனை செய்யும். நீதிமன்ற அவமதிப்புக்காக நாகேஸ்வரராவுக்கு ₹1 லட்சம் அபராத தொகை விதிக்கப்படுகிறது.அதேபோல் குறைந்தபட்ச தண்டனையாக இன்று(நேற்று) நாள் முழுவதும் வழக்குகள் அனைத்தும் முடியும் வரையில் நீதிமன்ற விசாரணை அறையில் அவர் அமர்ந்திருக்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். சிபிஐயின் இயக்குனராக இருந்த ஒருவருக்கு இதுபோன்ற தண்டனையை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பது வரலாற்றில் இது குறிப்பிடத்தக்கது.

30 நாள் ஜெயில் ஓகே.வா?:  வழக்கு விசாரணையின் போது கடும் கோபமடைந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில்,”ஏகே.சர்மாவின் இடமாற்றம் என்பது அவரது சிபிஐயின் பணிக்காலத்தையே பாதிப்படைய செய்துள்ளது. செய்த தவறுக்காக 30 நாள் ஜெயில் தண்டனை என்றால் அவருக்கு சம்மதம் தானா?. அவ்வாறு நீதிமன்றம் வழங்க நேரிடும் பட்சத்தில் அதனை அவர் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என தெரிவித்தார். இதனைக்கேட்ட நாகேஸ்வரராவ் சுமார் 5 நிமிடத்திற்கும் மேல் விசாரணை அறைக்குள் பதற்றமாகவே காணப்பட்டார்.  ஏற்கனவே, சிபிஐயின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்