SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக பிரமுகர் கொலையில் 4 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்: போலீஸ் காவலில் எடுக்க முடிவு

2019-02-13@ 00:07:50

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). திமுக செயலாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி மாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம், பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் ரமேஷ் தலைமையில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பின், பெரும்புதூரில் மதியம் நடந்த ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் ரமேஷ் கலந்து கொண்டார். அங்கு கூட்டம் முடிந்தவுடன் ரமேஷ்,ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் கட்சிப்பட்டு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு ரமேஷ் சென்றார். அங்கு வரவு, செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ, பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல், ரமேஷை சரமாரி யாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது. புகாரின்படி பெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரித்தனர்.

அதில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த குல்லா (எ) விஸ்வநாதனும்  அவரது கூட்டாளிகளும் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதையறிந்த குல்லா (எ) விஸ்வநாதன் (24),  சுரேந்தர் (25), சத்யா (27), செந்தில்குமார் (28) ஆகியோர் திருச்சி கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது, எதற்காக கொலை நடந்தது, தொழில் போட்டியா, அரசியல் காழ்ப்புணர்ச்சியா என தெரியவரும் என போலீசார் கூறினர். மேலும், இதில் உள்ள முக்கிய குற்றவாளி யார் என்பதும் தெரியவரும் என்றனர். இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றிய செயலாளர் கோபால்  ஆகியோர் கொலை செய்யப்பட்ட ரமேஷ் வீட்டுக்கு நேரில் சென்று, மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்