SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 9 பேருக்கு குண்டாஸ்

2019-02-13@ 00:05:47

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கொலை குற்றவாளிகள் உட்பட 9 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியில் குமரன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கொசப்பேட்டை பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்த நரேன்(எ)ஞானநரேன்(எ)நரேந்திரன்(24), புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 8வது தெருவை சேர்ந்த அருண்(எ)அருண்குமார்(26), ஐத்தா(எ)கவுதம்(எ)அப்பு(28),

பீப்பி(எ)பிரவீன்(எ)பிரவீன்குமார்(25), சரத்(எ)சரத்குமார்(26) மற்றும் கடந்த 2018ம் ஆண்டு ஊத்துக்கோட்டையில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய பெரிய கொளுத்துவாஞ்சேரி, பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வினோத்குமார்(24), அடிதடி வழக்கில் தொடர்புடைய விச்சூர், காந்தி நகரை சேர்ந்த அஜித்(எ)அப்புன்(22), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ஆவடி, காமராஜ் நகரை சேர்ந்த லஷ்மணன்(31), மணிகண்டன்(28) ஆகிய 9 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்