SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியார் நகரில் திருமண வீட்டில் 60 சவரன் கொள்ளை: மர்ம ஆசாமிகள் கைவரிசை

2019-02-13@ 00:05:04

பெரம்பூர்: பெரியார் நகரில்  திருமணத்திற்கு வைத்திருந்த, 60 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். சென்னை பெரம்பூரை அடுத்த பெரியார் நகர், கந்தசாமி சாலையை சேர்ந்தவர் தங்கவேலு (63). இவர்  தமிழக அரசின் தொழிலாளர் பிரிவில் இணை ஆணையர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகள் திருமணம் ஆனவர். 2வது மகளுக்கு  திருமண நிச்சயம் நடந்துள்ளது. அதற்காக, உறவினர்களுக்கு பத்திரிகைகள் வைப்பதற்காக தங்கவேலு, அவரது மனைவி சாந்தி மற்றும் மகளுடன் திருநெல்வேலி மற்றும் மதுரைக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை தங்கவேலுவின் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை  பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சி தகவல் கொடுத்தனர்.  இதுகுறித்து, அவர்கள் பெரவள்ளுர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷ்னர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு விசாரணை நடத்தினர்.முதல்கட்ட விசாரணையில் வீட்டின் முதல் தளத்தில் 3 அறைகள் உள்ளன.  ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த  லாக்கரை  மர்ம நபர்கள் அப்படியே எடுத்து சென்றுள்ளனர்.

லாக்கரில் சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் பணம்  இருந்ததாக  கூறப்படுகிறது. மதுரையில் இருந்து தங்கவேலு வந்தவுடன் திருட்டுபோன பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்பது முழுமையாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வீடு பூட்டி இருப்பதை பார்த்து கொள்ளையர்கள் நள்ளிரவில் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தனிப்படை அமைத்து   கொள்ளையர்களை  தேடிவருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்