SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘சின்னதம்பி யானையால் வாழ்வாதாரம் பறிபோகிறதே’: கிராம மக்கள் புலம்பல்

2019-02-12@ 21:13:45

பெ.நா.பாளையம்: சின்னதம்பி யானையால் எங்கள் வாழ்வாதாரம் பறிபோகிறதே என உடுமலை அருகே கிராம மக்கள் புலம்புகிறார்கள் சின்னதம்பி யானை குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வனத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சின்னதம்பி யானை வனப்பகுதிக்கும், மனிதர்கள் வாழும் பகுதிக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ பழகிவிட்டது. 15 அடி தூரத்தில் மனிதர்கள் நின்றாலும் அதை கண்டு கொள்வதில்லை. எனவே அதனை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்பட்டுள்ளது. உடுமலை அருகே தற்போது சின்னதம்பி யானை முகாமிட்டுள்ள கிராமங்களில் உள்ள மக்களும் இதே கோரிக்கையை வைக்கிறார்கள். இது பற்றி அவர்கள் கூறும்போது, நாங்கள் ெகாஞ்ச நிலங்களை வைத்து அதில் வாழை, நெல், கரும்பு பயிரிட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். தற்போது இந்த பகுதியில் சின்னதம்பி யானை உலா வருவதால் நாங்கள் நிலங்களுக்கு சென்று பயிர்களை பார்க்க முடியவில்லை. யானை பயத்தால் நாங்கள் அங்கு போவதில்லை.

கிணற்றில் நீர் அதிகரித்து மோட்டார் மூழ்கினாலும் அதனை பார்க்க முடியவில்லை. பயிரிட்டுள்ள நெல், வாழை, கரும்புகளையும் சின்னதம்பி யானை நாசமாக்கி வருகிறது. இது எங்களுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது ஒரு போகத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. இந்த தண்ணீரை வைத்துதான் நாங்கள் பயிரிட்டு வருமானம் ஈட்டி குடும்பத்தை நடத்துகிறோம். இந்த தண்ணீரை பயன்படுத்தாவிட்டால் அதிக மாதங்கள் கழித்துதான் தண்ணீர் விடுவார்கள். அதுவரை காத்திருக்க முடியுமா? எனவே சின்னதம்பி யானையை இங்கிருந்து அப்புறப்படுத்தி பறிபோகும் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணைக்கு பின்னர் என்ன உத்தரவு வருமோ? என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்