SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை உயர்வு

2019-02-12@ 21:12:56

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2018ல் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகமாகும். கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 2,000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இது தவிர காய்ச்சல் ஏற்படும் சீசன்களில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
கோவை மட்டுமல்லாது, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுமக்களும் இம்மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இம்மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கும், விபத்துக்களுக்கும் சிகிச்சை அளிக்க40 வெவ்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், இம்மருத்துவமனையால் பயனடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளை விட, 2018ம் ஆண்டு அதிக அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மருத்துவமனையின் டீன் அசோகன் கூறியதாவது:-

கடந்த 2017ம் ஆண்டு இம்மருத்துவமனையில் 12 ஆயிரத்து 708 முக்கிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 53 ஆயிரத்து 49 சிறிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில், 16 ஆயிரத்து 72 முக்கிய அறுவை சிகிச்சைகளும், 74 ஆயிரத்து 593 சிறிய அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினந்தோறும் 60 முதல் 70 பெரிய மற்றும் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டில் சிறிநீரகவியல் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு புதிய அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இருதயவியல் துறை லேப் வசதி, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை லேப் வசதி செய்யப்பட்டுள்ளது. ரத்தவங்கி சேவை, சிறப்பு விபத்து மண்டல சிகிச்சை போன்ற வசதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. இதன் காரணமாகவே இங்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு டீன் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்