SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனைகட்டி அருகே யானை கோவிலில் சின்னதம்பி யானையின் நலன் வேண்டி வழிபாடு செய்த மக்கள்: மீண்டும் தங்கள் பகுதிக்கு கொண்டுவிட விருப்பம்

2019-02-12@ 21:07:20

உடுமலை: சின்னதம்பி யானை நலமுடன் இருக்க வேண்டி யானை ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானை கோவிலில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கோவை ஆனைகட்டி, சின்னதடாகம் பகுதியில் சுற்றி திரிந்து பிடிபட்ட சின்னதம்பி யானை கடந்த ஜனவரி மாதம் 25ந் தேதி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை அங்கிருந்த கிளம்பி உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதிக்கு வந்தது. அங்குள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை தின்று அட்டகாசம் செய்தது. பின்னர் செங்கழனிபுதூர், மடத்துக்குளம், கண்ணாடிபுதூர் ஆகிய கிராம பகுதிக்குள் சென்று தனது வேலையை காண்பித்தது. கடந்த 11 நாட்களாக அந்த பகுதியில் தனக்கு விருப்பமான கிராம வயல்வெளிகளுக்குள் சென்று விரும்பியவற்றை சாப்பிட்டு அட்டகாசம் செய்து வருகிறது.

சின்னதம்பியை விரட்ட முதலில் மாரியப்பன், கலீல் ஆகிய 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. மாரியப்பன் திருப்பி அனுப்பப்பட்டு தற்போது கலீலுடன் சுயம்பு என்கிற கும்கி யானை வந்துள்ளது. சின்னதம்பி யானையிடம் இருந்து மனிதர்களை காக்க அவ்வப்போது கும்கிகள் பயன்படுத்துப்பட்டு வருகின்றன. நேற்று சின்னதம்பி யானை கண்ணாடிபுதூர் பகுதியில் முகாமிட்டிருந்தது. அங்கு வயல் வெளிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, நெற்பயிர்களை பிடுங்கி சாப்பிட்டது. 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து தேங்காய்களையும், குருத்துகளையும் சாப்பிட்டு ருசித்தது.மதிய நேரம் வயல்வெளியில் படுத்து ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வயல்வெளிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. தற்போது தினமும் சின்னதம்பி யானையின் சகஜ வாழ்க்கை இதுவென்று மாறிவிட்டது.

சின்னதம்பி இந்த பகுதியிலேயே உலா வருவதால் அதனை பார்க்க தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களை கண்டு கொள்ளாமல் தன் வீட்டு தோட்டம் போல கிடைப்பதை சாப்பிட்டுக்ெகாண்டு சின்னதம்பி உலா வருவதால் மக்கள் வந்து கண்காட்சிபோல பார்த்து செல்கிறார்கள். சின்னதம்பி யானைக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது.கரும்பு, நெல், வாழை பயிர்கள் அது சேதப்படுத்தி வரும் சூழ்நிலையிலும் அதனை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டரிடம் அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் மனு ெகாடுக்கப்பட்டு உள்ளது. சின்னதம்பி யானை நலமுடன் இருக்க வேண்டி ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானை கோவிலில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த பகுதியில்தான் முதலில் சின்னதம்பி யானை உலா வந்து குறும்பு செய்தது. இங்கிருந்துதான் அதனை வனத்துறையினர் பிடித்து டாப்சிலிப்பில் விட்டனர்.

இப்போது உடுமலை பகுதியல் உலா வரும் சின்னதம்பி யானையை என்ன செய்ய ேபாகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஆனைகட்டி பகுதி மக்களுக்கு எழுந்துள்ளதால் அவர்கள் இந்த வழிபாட்டை நடத்தி உள்ளனர். இது பற்றி யானை ேகாவில் பூசாரி பதுவன் கூறும்போது, நாங்கள் கோவிலில் யானை சிலைகளுக்கு படையலிடுவோம். இங்கு முகாமிட்டிருந்தபோது சின்னதம்பி யானை இங்கு வரும் எங்களுக்கு மிச்சம் வைத்து சாப்பிட்டுவிட்டு போ என்று சொன்னால் சென்றுவிடும். அந்த அளவுக்கு பண்புள்ள யானை. அதற்கு ஏதும் நேரக்கூடாது என்று இந்த பூஜையை நடத்தினோம் என்றார்.பூஜையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்றும், மீண்டும் எங்கள் பகுதிக்கே கொண்டு விட வேண்டும் என்றும் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்