SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி- காரைக்கால் மின்மய பணி மார்ச்சில் முடியும்: தென்னக ரயில்வே பொது மேலாளர் தகவல்

2019-02-12@ 21:06:14

திருவாரூர்: திருச்சி- காரைக்கால் ரயில் வழித்தடம் மின்மயமாக்கும் பணி வரும் மார்ச்சில் முடியும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரஷ்தா தெரிவித்துள்ளார். திருவாரூருக்கு நேற்று வருகை தந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரஷ்தா, காரைக்காலில் இருந்து அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 59 வேகன்களில் நிலக்கரி ஏற்றியவாறு மேட்டூர்  புறப்பட்ட 150 வது சரக்கு ரயிலை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர்  குல்ஸ்ரஷ்தா  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி- காரைக்கால் மற்றும் விழுப்புரம்- கடலூர்  ரயில் வழித்தடம் மின்மயமாக்குதல் பணிகள் நடப்பாண்டு இறுதிக்குள் (மார்ச்)  நிறைவடையும். திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். இந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்யும்.

திருவாரூரில் இருந்து திருச்சிக்கு  புதிய ரயில்கள் இயக்குவது தொடர்பாக பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாய் குறித்து ஆலோசித்த பின்னரே முடிவு செய்யப்படும்.  கூடுதல் ரயில் சேவை மற்றும் ரயில்கள் தூரம் நீட்டிக்கப்படுவது எம்பிக்கள் வைக்கும் கோரிக்கைகளை பொறுத்தே அமைய உள்ளது. இதில் முடிவெடுக்கும் அதிகாரம் ரயில்வே துறை அமைச்சகத்தின் கையில் தான் உள்ளது. இவ்வாறு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். பேட்டியின் போது  திருச்சி மண்டல ரயில்வே மேலாளர்  உதயகுமார் ரெட்டி மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்