SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்வாயில் தேங்கிய குப்பையால் சுகாதாரகேடு

2019-02-12@ 20:23:34

நாகர்கோவில்: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து வரும் தண்ணீர் பட்டணம் கால்வாய், ராதாபுரம், தோவாளை, அனந்தனார் சானல் உள்பட பல்வேறு சானல் வழியாக பாய்ந்து செல்கிறது. அனந்தனார் சானல் சுருளோட்டில் இருந்து பிரிந்து, ஆலம்பாறை, பார்வதிபுரம் வரும் சானல் அதன்பிறகு ஆசாரிபள்ளம், பறக்கை, தெங்கம்புதூர், பாம்பன்விளை, கோட்டார் சானல் என பிரிந்து செல்கிறது. கோட்டார் சானல் வல்லன்குமாரவிளையில் அத்திகடைகால்வாய் பிரிகிறது. இந்த கால்வாய் மூலம் 1141 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. மேலும் சுமார் 15 குளங்கள் இந்த கால்வாய் மூலம் நீர் ஆதாரங்களை பெற்று வருகிறது. தற்போது அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கோட்டார் சானலில் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அத்திகடை கால்வாயிலும் தண்ணீர் செல்கிறது. அந்த கால்வாயில் போடப்பட்டுள்ள மதகில் குப்பைகள் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் அந்த கால்வாயில் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

குப்பைகள் தேங்கி கிடந்த பகுதியில் இறந்த நாய்களும் கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த குப்பைகளை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாசனதுறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் ஆற்றுபாசன வசதியை பெற்று வருகிறது. கோடைகாலத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பெயர் அளவிற்கு சானல்கள், கால்வாய்கள் தூர்வாரப்படும். அதன்பிறகு தண்ணீர் வந்தபிறகு எந்தவித பராமரிப்பும் செய்வது இல்லை. நகர பகுதியில் தேங்கும் குப்பைகளை கால்வாய், சானல் பகுதிகளில் கொண்டு வைக்கின்றனர். சிறிய மழை, அல்லது வேகமாக வீசும் காற்றினால், கரையோரம் வைக்கப்பட்டு இருக்கும் குப்பைகள் ஆற்றில் விழுகிறது. இதனால் கால்வாய், சானல்களில் போடப்பட்டு இருக்கும் மதகு பகுதி மற்றும் குறுகலான பகுதியில் இந்த குப்பைகள் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சரியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தண்ணீர் சீராக செல்ல வசதியாக தண்ணீரில் தேங்கும் குப்பைகளை அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் அகற்றினால், தண்ணீர் சீராக செல்லும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்