தஞ்சை சரபோஜி அரண்மனையில் ரூ.1 கோடி ஸ்படிக, மரகத லிங்க சிலைகள் கொள்ளை

Date: 2013-04-21@ 05:49:11

தஞ்சை: தஞ்சை அரண்மனையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஸ்படிகம், மரகத லிங்க சிலைகள் மற்றும் பழங்கால மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் கொள்ளைபோயின.தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜியின் அரண்மனை தஞ்சை கீழ வீதியில் உள்ளது. ‘தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை மராட்டியர் அரண்மனை அகழ் வைப்பகம்Õ என்ற பெயரில் இந்த அரண்மனை செயல்படுகிறது. இதில் மன்னர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இந்த அரண்மனைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது இந்த அரண்மனை சரபோஜி மன்னரின் வாரிசான சிவாஜி ராஜா பான்ஸ்லே கட்டுப்பாட்டில் உள்ளது. இவரது வீடும் இந்த அரண்மனை வளாகத்தில் உள்ளது. இந்த அரண்மனை தினமும் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும்.நேற்று முன்தினம் மதியம் 2.30க்கு அரண்மனையை சிவாஜி ராஜா பான்ஸ்லே சுற்றிப் பார்த்தபோது எல்லா பொருட்களும் சரியாக இருந்துள் ளது. மாலை 5.30க்கு வந்து ஆய்வு செய்தபோது, 3 ஷோகேஸ்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.

 அதில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு அங்குலம் உயரமுள்ள மரகத லிங்கம் சிலை 1, மூன்று அங்குல உயரமுள்ள ஸ்படிக லிங்கம் 2, யானை தந்தத்தால் ஆன 4 அங்குல உயரமுள்ள குழந்தை கிருஷ்ணன் சிலை 1, யானை தந்தத்தால் ஆன யானை சிலைகள் 5, யானை தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பு 1, மன்னர்கள் பயன்படுத்திய யாழ்முக கைப்பிடி உள்ள கத்திகள் 5 ஆகியவை திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து அவர் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீ சார் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.சிவாஜி ராஜா பான்ஸ்லே கூறுகையில், கொள்ளை போன பொருட்கள் அனைத்தும் 300 முதல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மன்னர்கள் பயன்படுத்தியவை. பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும்Õ என்றார்.மின்தடையால் கேமரா செயலிழப்பு: அரண்மனை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை மின்தடை ஏற்பட்ட நேரத்தை பயன்படுத்தி இந்த ஷோகேஸ்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

sms spy app read spy apps free
my wife emotionally cheated on me women cheat because my boyfriend cheated on me with a guy
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

Like Us on Facebook Dinkaran Daily News