SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழர்களின் பண்பாட்டை அறிவதில் மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல : உயர்நீதிமன்ற கிளை

2019-02-12@ 15:03:22

மதுரை : தமிழர்களின் பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள சிவகளை பகுதியில் அகழாய்வு நடத்துவது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். சிவகளை பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் சுமார் 1000 ஏக்கர் பரப்பில் ஆய்வு நடத்தியபோது, ஆதிமனிதர்கள் வாழ்ந்ததர்கான அடையாளங்கள், 13 ஆயிரம் ஆண்டு பழமையான 3 நடுக்கற்கள், சுண்ணாம்பிலான முதுமக்கள் தாழிகள், பண்டையை தமிழ் எழுத்துக்களாலான கல்வெட்டுகள் மற்றும் மேட்டுக்குடியின மக்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தூத்துக்குடி சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்தும் கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி முடிவு என்ன ஆனது என்றும், இதுவரை ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் அதிகாரிகள் மாற்றம் என புகார்கள் எழுந்ததை குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல என தெரிவித்தனர். மேலும் இதிகுறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும், பதிலளிக்க தவறினால் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். இந்த வழக்கு பிப்., 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்