SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்தநாட்டு குடியுரிமை வழங்கப்படும்?

2019-02-12@ 14:40:14

பயண நேரங்களை குறைத்ததில் விமானங்களின் பங்கு அலாதியானது. தரை கடந்த இவ்வகை பயணங்கள் இன்றைக்கும் பலருக்கும் ஆச்சரியங்களையே ஏற்படுத்தி வருகின்றன. விமானம் குறித்த தெரியாத சில விபரங்களை தற்போது அறிவோம்.விமானிகள் இருக்கும் அறை ‘காக்பிட்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மற்றவர்கள் அவ்வளவு சீக்கிரம் நுழைந்து விட முடியாது. இந்த கதவை திறக்க சீக்ரெட் கோட் நம்பர் உண்டு. ஒவ்வொரு பயணத்திலுமே இந்த எண் மாற்றப்படும்.

விமானம் பறக்கும் போது யாராவது இந்த எண்ணை அழுத்தி நுழைய முயன்றால் கேமரா மூலம் பைலட் தெரிந்து கொள்வார். ஊழியர் என்றால் அனுமதிப்பார். மற்றவர்கள் என்றால் கதவை திறக்க முடியாத அளவிற்கு லாக் செய்து கொள்ளும் வசதி காக்பிட்டில் உண்டு.
அதிக உயரத்தில் பறக்கும் போது ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டியதிருக்கும். அதில் சில சிரமங்கள் ஏற்படலாம் என்பதற்காகவே தாடி, மீசையுடன் பைலட்டுகளை விமானங்களை இயக்க அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் விமானம் இயக்க அதிக சக்தி தேவைப்படாது. மலைப்பகுதியில் இறங்கும் வாகனங்கள் போல குறைவான ஆற்றலே இதற்கு போதுமானது.  விமானத்தில் நான்கு இஞ்சின்கள் இருக்கும். எனவே நடுவானில் பழுதாகிவிட்டால் விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை.

விமான ஓடுபாதையில் கால்நடையோ, பிற விமானமோ அதீத பலத்துடன் வீசும் பக்கவாட்டு காற்றோ இருந்தால் தரை இறங்க முடியாது. எனவே மீண்டும் டேக் ஆப் ஆகி வட்டமடித்து கொண்டு இருக்கும். நடுவானில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என்று எண்ணம் பலருக்கும் ஏற்படும். இதை மூன்று வகையில் தீர்மானிக்கிறார்கள். பதிவு பெற்ற விமானத்தின் நாடு, எந்த நாட்டின் மேலே பறக்கிறதோ அந்த நாடு அல்லது எந்த நாட்டில் தரையிறங்குகிறதோ அந்த நாடு என்ற விதிமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலும் விமானம் பதிவு செய்யப்பட்ட நாடே கணக்கிடப்படுகிறது.

மின்னல், சூறாவளி, பறவைகள் போன்றவை தாக்காதவாறு தற்போதைய விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்ளன.
விமானம் விபத்திற்கு உள்ளாகும் போது சட்டென்று பலருக்கும் பாராசூட் கொடுக்க முடியாது. அதில் இறங்க பயிற்சியும் இருக்காது என்பதால் இம்முறை கடைபிடிப்பதில்லை. மேலும் மிதமான வேகத்தில் பறக்கும் விமானத்தில் இருந்தே பாராசூட்டில் குதிக்க முடியும். மேலும் 16 ஆயிரம் அடிக்கு குறைவாக இருந்தால் மட்டுமே பாராசூட்டுடன் வெளியேற முடியும். விமானத்தில் கடைசி 5 இருக்கையில் இருப்பவர்களுக்கு விபத்துகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு 50 சதவீதம் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi_viruthu_iyo1

  அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

 • mumbai_vivasayigal11

  மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்