SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதா...... மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது

2019-02-12@ 07:46:05

டெல்லி: சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் இம்மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடக்கிறது. குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும், திருத்த மசோதா, 2016ல், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அசாமில் மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்காக தாக்கல் செய்யப்படுகிறது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தாக்கல்செய்து உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விவாதம் நடக்கிறது. இந்த மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்துள்ள, அங்கு சிறுபான்மையினராக இருந்த, ஹிந்து, சீக்கிய, ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். இதற்காக, 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை, ஆறு ஆண்டுகளாக குறைப்பதாக, திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்