SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒளி பிறக்கட்டும்

2019-02-12@ 06:17:18

சிவகாசி என்றாலே வேட்டுச் சத்தமும், வெளிச்சம் தரும் மத்தாப்புகள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த தீபாவளி முதல் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கின்றன. 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதற்கு காரணம் தான் என்ன?கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக பிரச்னை எழுந்தது. இதனால், நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால்,  பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதேநேரத்தில் இனிமேல் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

பசுமை பட்டாசுகள், சாதாரண பட்டாசுகளை போலவே இருக்கும். வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும். அதேபோல 40 முதல் 50 சதவீதம்குறைவான நச்சு வாயுவை வெளியிடும் என்று கூறப்படுகிறது.சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம் ஆகியவை ஆய்வு நடத்தி வருகின்றன. இதன் ஆய்வறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த ஆய்வறிக்கையை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். இதன் பிறகு தான் பசுமை பட்டாசுகளில் சேர்க்கப்படும் வேதியியல் பொருட்கள் குறித்து தெரிய வரும்.  பட்டாசுகள் தயாரிக்க முடியும். பசுமை பட்டாசில்  உள்ள வேதியியல் தன்மை குறித்து தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு இதுவரை எந்த ஞானமோ, பயிற்சியோ இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு அதற்கான பயிற்சியும் அரசு சார்பில் வழங்கப்படவில்லை.

எனவே, பட்டாசு தொழிலை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உரிய வகையில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதே போல சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் பட்டாசு தொழில் பல மாதங்களாக முடங்கிக் கிடப்பதால், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் பிழைப்பு தேடி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றன. இதனால் கஞ்சித்தொட்டி திறப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். தற்போது மீண்டும் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் தொடங்கி உள்ளனர். எனவே, பட்டாசு தொழிலை பாதுகாத்து அத்தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையில் ஒளி பிறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-06-2019

  27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்