SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகனராவ் நடிகர் கட்சியில் ஐக்கியம்

2019-02-12@ 01:48:33

திருமலை: ஆந்திராவில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகனராவ் சேர்ந்தார். அவருக்கு  அரசியல் சட்ட ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அலுவலகத்துக்கு  தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன்ராவ் நேற்று வந்தார். அவர் நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் ஜனசேனா கட்சியில் இணைந்தார்.  இதையடுத்து அக்கட்சியின் சட்ட ஆலோசகராக ராம்மோகன ராவ் பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நடிகர் பவன் கல்யாண் கூறியதாவது: மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராம்மோகன ராவ்  சிறந்த அரசியல்  ஆலோசகராக திகழ்ந்த அனுபவம் உள்ளவர். இவரை ஜன சேனா  கட்சித் தலைவரின் அரசியல் ஆலோசகராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டபோது அவரும்  ஏற்றுக்கொண்டார். தமிழக அரசியலில் தனது அனுபவத்தின் மூலமாக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தியவர். அதிமுக அரசின் நிர்வாகத்தில் முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் கோமாவில் இருந்தபோது பல இக்கட்டான சூழ்நிலையில் அரசு நிர்வாகத்தை எந்த பாதிப்பும் இல்லாத வகையில்  சீரோடும் சிறப்போடும் நடத்தியவர். என் மீது நம்பிக்கை வைத்து எனது அரசியல் ஆலோசகராக ஏற்றுக்  கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்